நான் வாழ்ந்த குடிச

குடிசை ஒன்றை
கண்டேன்
மனம் உடைந்து போவதை
உணர்ந்தேன்.

பச்சை மர ஓலையில்
மிச்சஉள்ள கிளைகளை
எடுத்து கட்டிய குடிசை இது.

கெளரவம் பார்க்கும்
மனிதர்கள் நடுவில்
தலை நிமிர்ந்து
வாழ காட்டிய
குடிசை இது.

எட்டி நின்று பார்த்த
வெட்டி எரிந்த
காடு போல கிடக்கும்
இந்த குடிசை

என் குடிசையில் நான்
வாழும் காலம்
மாளிகையில் அரசனும்
கூட வாழ்ந்திருக்கமாட்டான்.

இரவின் அழகும்
நிலவின் ஒளியும்
தெரியும் இந்த அடியேன் கட்டிய
குடிசை
மாளிகை இது.

ஓழுக்கமாய் வாழ
நுனுக்கமா
கட்டிய குடிசை
காசி பணம் இருந்தாலும்
ஏசி வீட்டில்
வாழ்வதை விட
குடிசைவீட்டுல வாழ்ந்தால்
எவ்வளவு சந்தோசம்




பொத்துவில் அஜ்மல்கான்
இலங்கை

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (5-Dec-16, 9:29 am)
பார்வை : 96

மேலே