அன்புடைமையே அறிவுடைமை

தூய்மையான அன்பு கொள்வதே கடமை.
இதை மறுப்பதும் மறப்பதும் மடமை..
இதை புரிந்து நடப்பதே அறிவுடைமை...

ஒருவர்க்கொருவர் உதவி செய்வதே அன்புடைமை....
இதைப் பின்பற்றி வாழ்ந்தாலே நீங்கும் ஏழ்மை...
இல்லாவிடில், அதுவே இயலாமை...

தன் பிள்ளைக்கு துயரென்றால், துடிப்பதே தாய்மை...
தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கு துயரென்றால், துடிப்பதே சமூகப் பொறுப்புடைமை....
துடிப்பதோடு நின்றுவிடாமல், அத்துயர் போக்க,
ஒன்றிணைந்து செயல்படுவதே
ஆக்கமுடைமை.....

மனிதர்களோடு மனிதர்கள் கொள்ளும் ஒற்றுமை....
அதனால் விளையுமே சமூகத் தூய்மை....

இயற்கையோடு உயிரினங்கள் கொள்ளும் ஒற்றுமை...
அதனால் உருவாகுமே உலகத் தூய்மை.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (4-Dec-16, 11:04 pm)
பார்வை : 366

மேலே