வினை தீர்க்கும் விதி

பகையாடும் பகைவனின் பகட்டு பண்பிலும்
நகையாடும் நண்பனின் நடிப்பு அன்பிலும்
உறவாடும் உறவுகளின் போலி முகத்திலும்
களவாடும் கயவர்களின் கூலி தேசத்திலும்
புரியாத புதிர் போட்டு
பிழை போல பயம் சேர்த்து
விளையாடி வினை தீர்க்கும் விதியிலும்
அறியாத உயிர் பெற்று
கிளை போல நயம் சேர்த்து
கலையாடி கணித்து நிற்கும் மதியிலும்,
இறைவா என்னை காத்திடு..
ஏழை குழந்தை சிரிப்பிலும்
பசி போக்கும் இடத்திலும்
உயிர் காக்கும் நிலையிலும்
உண்மை உரைப்பிலும்
நேர்மை போக்கிலும்
இறைவா என்னை அங்கே சேர்த்திடு,
என்றும் அங்கே நிலைத்திடு!!!

எழுதியவர் : புதுக்கவி2016 (5-Dec-16, 2:29 pm)
சேர்த்தது : puthukavi2016
பார்வை : 128

மேலே