ஒரு பக்கக் காதல் கதை பாகம் -15
சமயலறையினுள் சலசலப்பு கேட்டு சிலிர்த்தெழுந்தாள்...
அம்மா: இப்பதான் முதல் தடவ இங்க வர்ற போல?
அவள்: எப்படி தெரியும்?
அம்மா: உன் செருப்போசை சொன்னுச்சு
அவள்: ஆரம்பிச்சுடீங்களா ..உங்க அநாகரீக புராணத்த...இன்னும் எத்தணை நாள் இதெல்லாம்?
அம்மா: இதெல்லாம் சம்ப்ரதாயம் இல்ல சயின்ஸ்னு நீங்க புரிஞ்சுக்குற வரைக்கும் ..பாக்டீரியாஸ் ரொம்ப சீக்கிரம் வயித்துக்குள்ள போகவும், dettol கம்பெனி வளரவும் உங்களைத்தான் யூஸ் பண்ணுது
அவள்: (செருப்பை வெளியில் வேகமாய் கழட்டிவிட்டு) ..அதென்ன டீல் ? என்னென்னமோ பேசுறீங்க ..அம்மாவுக்கு உண்டான அறிகுறியே இல்லையே உங்ககிட்ட ?
அம்மா: கொஞ்சம் அசைபோட்டு (If you are good at something never do it for free) ஹீத் லெட்ஜ்ர் சொன்னதுபோல எனக்கு எது நல்லா வருமோ அதுக்கு டீல் போடுவேன்
அவள்: கொஞ்சம் பேசும்போது புரியுற மாதிரி நாலு வரியும் சேத்து பேசுனீங்கனா கொஞ்சம் அர்த்தம் இருக்கும்
அம்மா: அவளருகில் வந்து ...என் புள்ளய படிக்க வெச்சேன், அவன் எனக்கு கூகுளை சொல்லித்தந்தான், மத்ததெல்லாம் அது சொல்லித்தந்தது..அவன் வேலைய வீட்ல நான் பாப்பேன் என் வீட்டு வேலைய அவன் பாப்பான்
அவள்: ஏகலைவன் மாதிரி நீங்க கூகிளைவன் ..செம ...அதுசரி அதென்ன டீல் ?
அம்மா: ஒருவாரம் அவன் வெளில ஏதோ முக்கியமான வெட்டி வேல இருக்காம் ...அதான் ஒருவாரம் வீட்டு வேலைய மட்டும் பாத்துட்டு போ மத்ததை நா பாத்துக்கறேன்னேன்
அவன்: அம்மா..மௌஸ் எங்கவெச்ச ?
அம்மா: எலி மாதிரி கொடைச்சிட்டே இருப்பான் ..தொ வரேண்டா ...
(அவள் சென்றபின் ஆச்சரியத்தில் பொங்கியது பாலும் பெண்பாலும்..)