உன்னை போல் ஒருவன்
நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரி சேர விரும்பினேன் மதிப்பெண் பற்றி கேட்க வேண்டாம்.
அந்த நேரத்தில் ஷங்கரின் நண்பன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது அதில் இன்ஜினியரிங் படிப்பு பற்றியும் இன்ஜினியரிங் கல்லூரி பற்றியும் காட்டப்பட்டது.அந்த படத்தை பார்த்த பிறகு நானும் எனது நண்பர்கள் இருவரும் இன்ஜினியரிங் படிக்கலாம் என்று முடிவு செய்தோம்.மேலும் அந்த நேரத்தில் இன்ஜினியரிங் படிப்பு தான் மாணவர்களிடத்தில் ஒரு ஆசையாக இருந்தது.
எனது நண்பர்கள் இருவரும் என்னைபோல தான் அதனால் மதிப்பெண்ணில் பெரிய மாற்றம் இல்லை.எனது வகுப்பில் இருந்த மற்றொரு நண்பன் நன்றாக படிப்பான் அவனது மொத்த மதிப்பெண் குறைவு தான் ஆனால் cutoff என்று சொல்லக்கூடிய மதிப்பெண் 183 .அவனும் நண்பன் படம் பார்த்துள்ளான் போல இன்ஜினியரிங் படிக்க முடிவு செய்திருந்தான்.
இன்ஜினியரிங் படிக்க கருத்துரை வழங்கல் (counselling) சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.அதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பம் விலை ரூபாய் 300 .நன் என் அப்பாவிடம் சொன்னேன் அவருக்கு சந்தோசம் உடனே சம்மதித்தார்.
விண்ணப்பம் வாங்க பணம் கேட்டேன்.என் அப்பா ஒரு ஜவ்லி கடையில் வேலை செய்கிறார்.அடுத்த நாள் ஓனரிடம் ரூபாய் 300 வாங்கி கொடுத்தார்.
நானும் எனது இரு நண்பர்களும் விண்ணப்பம் வாங்கினோம்.நன் எங்கள் ஊரில் நன்றாக படித்து இன்ஜினியரிங் கல்லூரியில் வேலை செய்யும் எனது மாமாவிடம் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்தென் .அவரது வழிகாட்டுதலின் படி விண்ணப்பித்தேன்.
இன்ஜினியரிங் பற்றி யாரிடம் கேட்டாலும் வெகு அமர்க்கலாமாக சொன்னார்கள்.சம்பளம் நெறைய வாங்கலாம் வாழ்கை தரம் உயரும் என்றும் ஒரு மாய தோற்றமாகவே அனைவரும் சொன்னார்கள்.ஆனால் என்ன பிரிவு சேரலாம் என்று விசாரித்த பொது பல பதில்கள் கிடைத்தது கடைசியில் மிஞ்சியது பெரும் குழப்பம் . இறுதியாக எனது மாமா மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியராக வேலை செய்வதால் நீ மெக்கானிக்கல் பிரிவு எடு என்று சொன்னார் . சரி நமக்கும் படிக்கும் பொது உதவுவார் என்று நானும் சரி என்று முடிவு செய்தேன்.
இதற்கிடையில் கருத்துரை வழங்கல் (counselling) தேதி சென்னையிலிருந்து கடிதம் மூலம் வந்தது.எனது நபர்களுக்கும் வந்தது ஒருவன் எனக்கு முதல் நாள் மற்றொருவன் எனக்கு அடுத்த நாள் செல்வதாக அமைந்தது . அவர்களிடம் என்ன பிரிவு சேர போறிங்கனு கேட்டேன் இருவரும் முடிவு செய்யவில்லை என்றார்கள். நன் மெக் என்றதும் சரி மெக் என்று முடிவு செய்தோம்.
கருத்துரை வழங்கல் (counselling) செல்வதற்கு இரண்டு நாள் முன்பு எனது பக்கத்துக்கு விட்டு அண்ணா பெங்களூரில் வேலை பார்க்கிறார் அவர் என்னிடம் சிவில் படித்தால் நல்ல மார்க்கெட் இருக்கு வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும் நல்ல சம்பளம் வரும் என்றார் .
மீண்டும் ஒரு பெரிய குழப்பம்.
என் அப்பா மிகவும் கஷ்டப்பட்டு தான் என் குடும்பம் நடக்கிறது எனக்கு இன்ஜினியரிங் பீஸ் கூட வங்கியில் கல்வி கடன் வாங்கித்தான் கட்ட திட்டமிட்டுள்ளோம். இந்த காரணத்தால் எளிதில் வேலைகிடைத்து விரைவில் சம்பளம் வாங்க சிவில் பிரிவு உகந்தது என்று அவர் சொன்னார்.
கடைசியில் ஒரு மனதாக சிவில் பிரிவை முடிவு செய்தேன்.
எனது மதிப்பெண் குறைவு தான் அதனால் எந்த கல்லூரி சேர்வது என்பது மாபெரும் குழப்பமாக முன்நின்றது.
முடிவு செய்யாமல் சென்னை செல்ல நான் எனது அப்பா மற்றும் எனது தாய் மாமா மூவரும் ட்ரெயினில் கிளம்பினோம்.முதன் முதலில் ட்ரெயின் பயணம் எனக்கும் எனது அப்பாவிற்கும், எனது மாமா ஒரு முறை சென்றுள்ளார் அவரின் மகள் இன்ஜினியரிங் தான் படிக்கிறார் .
நீண்ட இரவு பயணம் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த படி நான்.நாளை பற்றி கவலை இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றேன்.
சென்னையில் முதல் நாள் எனது மாமா வழிகாட்ட பஸ்சில் சென்று அண்ணா பல்கலைக்கழகத்தை அடைந்தோம். அங்கு சித்திரை திருவிழா போல மாபெரும் கூட்டம் நானும் அப்பாவும் திகைத்து பொய் நின்றோம் எனது மாமா முன்பு ஒருமுறை வந்த அனுபவத்தால் எங்களை உள்ளே கருத்துரை வழங்கல் (counselling) நடைபெறும் இடத்திற்கு அழைத்து சென்றார்.
கல்லூரி முடிவு செய்யாமல் குழப்பத்தில் வரிசையில் நான் நின்றுகொண்டிருந்தேன் அப்போது என் அப்பா போன் அடித்தது.எனது அத்தை பயன் பேசினார் என்னிடம் அவர் சொன்னது தனது நண்பன் படித்த கல்லூரியில் சேர்ந்து படி அவன் வேலை பார்க்கும் கம்பனியில் உன்னை சேர்த்து விடுவான் என்றார் .அந்த நேரத்தில் அவர் சொன்னது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது.
ஒரு வழியாக அவர் சொன்ன கல்லூரியில் சிவில் பிரிவு எடுத்தேன் .எல்லாம் முடித்து வெளியே வந்தால் நன்றாக மலை பெய்தது அதை பார்த்ததும் வானத்துக்கே நான் இன்ஜினியரிங் சேர்ந்தது பிடிக்காம அழுகுதோனுதா தோணுச்சு .
மூவரும் மீன்டும் ட்ரெய்ன்ல விடு திரும்பினோம்...........
இதுலருந்து நா என்ன தெரிஞ்சுக்கிட்டேனா நா இன்ஜினியரிங் ஆசைபட்டு ஆர்வமா சேரல அதனால தானோ என்னவோ முதல் செமெஸ்டர்ல 3 பாடம் தோல்வி (arrear ). ஆனால் நா அதை பாத்து பயப்புடாம இன்னக்கி எல்லா பாடமும் தேர்ச்சி (pass ) பண்ணி ஒரு இன்ஜினீரா இருக்கேன் .
ஆனால் எனக்கு இன்னும் வேலை கிடைக்கல . இன்ஜினியரிங் பற்றிய ஒரு மாயை இருக்கு அது இப்போ மெது மெதுவா கொறஞ்சுகிட்டருக்கு.என் நண்பன் நல்லா படிப்பான் 183 cutoff மதிப்பெண்ணு சொன்னேன்ல அவன் ஒரு நல்ல கல்லூரில படிச்சுட்டு இப்போ வேலை பாத்துட்டு இருக்கான்.
சுமாரான மதிப்பெண்ணோட சுமாரான கல்லூரில படிச்சுட்டு வெளிய வரதுனால தா இந்த கஷ்டம்
தரமான கல்வி எல்லாருக்கும் கிடைக்கணும் அது இலவசமா கிடைக்கணும்னு நா சொல்லல கிடைச்ச நல்லாருக்கும் ................