மீன் துண்டு

ரவி ஒரு சாதாரண மீன் கடையில் மீன் வெட்டுபவர்.சந்திரன் வீடு வீடாகச் சென்று கேஸ் சிலிண்டர் போடுபவர்.சந்திரன் மகன் காந்தி, 3ம் வகுப்பு படிக்கிறான்.தினமும் 3 மணிக்கெல்லாம் ஐஸ் பெட்டிகள்
கொண்ட மீன் பெட்டிகள் கடைக்கு வந்து இறங்க "டம் டம்" என்ற சத்தம் சுமார் அரைமணி நேரம் ரவியின் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.இடத்தை சுத்தம் செய்து மீன்களை விலைப் படியும், வகைப் படியும் அடிக்கி வைக்கும் நேரங்களில் "கெண்டைய அங்க வை,நகரைய இங்க கொட்டு,ஊலா அங்க போடு" என்று மீன் கடை உரிமையாளர் கோபால்,அடுத்தடுத்து கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பார்.உடன் வேலை பார்க்கும் மணி,குமார் இருவரும் வேலைகளில் அவ்வளவு முனைப்புக் காட்டுவதில்லை.ஆனால் ரவி தன்னால் முடிந்தவரைக்கும் எல்லா வேலைகளையும் அவனே செய்வான்.

ரவி மீனை வெட்டும் இடத்திற்கு சென்றவுடன் ,கோபால் வரிசையாக "சர் சர்" என பில் போட்டு மீனை தட்டில் வைத்து சுத்தம் செய்ய அனுப்புவார். ரவி ஒரு மீனை செதுக்குவதற்குள் இறால் மீன் உறிக்க வந்து விடும்,அதையும் உறித்து பின் அடுத்து என வரிசையாக தட்டுக்கள் வந்து கொண்டே இருக்கும்.மக்கள் தான் வாங்கிய மீனை அடையாள படுத்த மஞ்சள்,சிவப்பு நிற துணிப்பைகளை போட்டு அடையாள படுத்தி நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்கிச் செல்வார்கள். வரிசையாக அடுக்கி வைப்பதற்கு மட்டும் மணியும், குமாரும் எங்கிருந்து வருவார்களோ தெரியாது ஆனால்,வந்துவிடுவார்கள்.மணி வரிசையை ஒரு முறை மாற்றி வைத்து விட்டான். மீன் வாங்க வந்தவர் தன் மீனை காணவில்லை என்று ரவியின் குடும்பத்தை "ஏன்டா ......" வசவுகள் ரவியின் காதுகளில்,
பொருட்படுத்தாமல் அழுகையையும் கோபம் சேர்ந்த சோகமுகத்தையும் மறைத்து வைத்துக் கொண்டு,மீண்டும் தட்டுக்களில் இருக்கும் மீனை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான்.இந்த நேரத்தில் குமார் கோபாலிடம் "முதலாளி இவன் சரிபட்டு வரமாட்டா முதல்ல இந்த ரவிப் பயல வேற கடைக்கு மாத்துங்க" கோர்த்துவிடுகிறான்.ரவி கையில் இருப்பதோ கத்தி ஆத்திரத்தை மீனின் மீது காட்டுகிறான். "சர்ர்ர்ர்" என்று ஒரு முறை மரக்கட்டையில் கத்தியை உரசுகிறான்.பின் வேகமாக செதிலை செதிக்கிவிட்டு "டக் டக்" என வேகமாக மீனை வெட்ட ஆரம்பிக்கின்றான்.ரவியின் தற்போதைய வீட்டு நிலைமை நியாபகம் வருகிறது "என்ன வாங்கிட்டு வந்தீங்க? தக்காளி கிலோ எவ்வளோ ரூவா?" என்று கேட்கும் மனைவி."அப்பம் வாங்கிட்டு வந்தீங்களா?" என கேட்கும் மகள்."பேனா வாங்கிட்டு வந்தீங்களா?" எனக் கேட்கும் மகன்.தீடீரென்று ரத்தம் வரிசையில் நின்ற மக்களின் மீது தெரிக்கிறது.

ரவியின் ஆள்காட்டி விரல் துண்டாகப் போனது.ரவி கட்டுப் போட்டுக் கொண்டு அன்றைய கூலியில் பாதியை வாங்கி அதில் பாதி அரிசிக்கும்,ஆஸ்பத்திரிக்கும் கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்றான். மனைவி டீவியில் நாடகம் பார்த்துக் கொண்டு "வந்துட்டீங்களா வாங்க" என்று சொல்லிவிட்டு அரிசியை வாங்கி வைத்து விட்டு,நாடகத்தில் 'அடுத்து வருவது' பகுதியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்,தன் வீட்டில் அடுத்து என்ன நிகழும் என்பதை அறியாது.மகன் "போங்கப்பா இன்னைக்கும் பேனா வாங்கிட்டு வரலையா"சொல்லிட்டு விளையாட போய்ட்டான்.மகள்,"அப்பா"என்று துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்.வந்துவிட்டு "போங்கப்பா போய் குளிச்சிட்டு வாங்க ஒரே கவுச்சியா இருக்கு" சொல்லிவிட்டு போய்விட்டாள்.ரவி குளித்துவிட்டு தூங்கச் சென்று விடுகிறான்.ரவி நடு ராத்திரி ஒரு மணிக்கு சாப்பிட்டுதான் பழக்கம் அப்பதான் 3 மணிக்கு கடைக்குப் போய் பெட்டிய இறக்க ஆரம்பிச்சா வேலை சரியா இருக்கும்னு ,இரவு 7 மணிக்கு தான் வீட்டுக்கு வருவான் .ரவி தான் பிள்ளைகளுடன் செலவிடர நேரம் ரொம்ப கம்மிதான்.அடுத்த நாள் கடைக்குப் போரான் வழக்கம் போல வேலை நடக்குது, ஆனா ரொம்ப நேரமாகுது கோபாலோட உத்தரவு போடுர வேகத்துக்கு ஈடு கொடுக்கமுடியல்லை.கோபால் அதுனால "மணி நீ மீனை வெட்டு ,ரவி நீ தட்ட பாத்துக்கோ" சொல்லிட்டுப் போறாரு.கோபால் பக்கத்துக் கடைல டீ குடிச்சிட்டு வரதுக்குல்லையும்,கூட்டம் டீ கடைய தாண்டி போய்ட்டு இருக்கு மணி ஒரு மீனை கால்மணி நேரத்துக்கு மேலா வெட்டுரான்.அப்பதா கோபாலுக்கு ரவி திறமை,உழைப்பு தெரியுது ."உன்னால முடிஞ்ச வரைக்கும் வெட்டு" ரவியிடம் கோபால் சொல்லிட்டு போய்ட்டாரு.

ரவி மீனை செதுக்க ஆரம்பிக்கிறான்,சந்திரன் தன் மகனோட கடைக்கு வந்து வரிசையில நிற்கிறார்.சந்திரன் மீன் எடுத்து ரொம்ப நாள் ஆயிடுச்சு கடைக்கு வந்திருக்கிறார்.சந்திரனோட மனைவி மீனா ரொம்ப கணக்கு பாக்குரவுங்க எப்பையாவதுதான் வீட்டில் அசைவம் எடுக்க சந்திரனுக்கு அனுமதி கிடைக்கும்.சந்திரன் தான் ஒவ்வொரு வீட்டில சிலிண்டர் போட்டுட்டு அவுங்க கொடுக்குற 45 ரூவா காச வைச்சுதான் அன்னைக்கு அசைவம்.காந்திக்கு பொறிச்ச மீன் ரொம்ப பிடிக்கும் .காந்தியும்,சந்திரனும் வரிசையில நிற்கின்றனர்.காந்தி"இந்த மீன் நம்ம மீனாப்பா" என வரிசையில் தட்டில் இருக்கும் ஒவ்வொரு மீனாக காட்டிக் கேட்கிறான்.தீடிரென்று காந்தி கத்துகிறான் "தெரிக்குதுப்பா தெரிக்குதுப்பா" சரி,சேர்ல போய் உக்காருன்னு சந்திரன் சொல்கிறான்.காந்தி சேர்ல போய் உட்கார்ந்து வறுத்த மீன் துண்டையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

ரவிக்கு தன் கடந்த கால நினைவுகள் வருகிறது.ரவி வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவன்,ஆனால் விலங்கியல் பாடம் மட்டும் பிடிக்காது.அவன் 12ம் வகுப்பு படிக்கும் போது அவன் அப்பா இறந்து விட்டார்.அம்மாவும் ரவியும்தான் வேலைக்குப் போக வேண்டிய நிலைமை வீட்டில்,மீன் கடையில் வேலைக்கு சேர்ந்து அதுவே அவன் பிழைப்பாகிப்போனது. ரவி சிறு வயதில் எதற்கெடுத்தாலும் ரொம்ப சுத்தமாக இருக்கணும்னு ஆசப் படுவான். ரவிக்கு கோழி,மீன்,கறி சாப்பிட பிடிக்கும் ஆனால் அதை தொட்டு வாங்க பிடிக்காது.ரவி தன் தந்தை சூரியனுடன் ஒரு நாள் மீன்வாங்கும் போது மூக்கை மூடிக் கொண்டு "நீங்க மட்டும் போங்க" சொன்னது ரவிக்கு காந்தியை பார்த்ததும் ஞாபகம் வந்தது ,ஞானி போல் சிரித்தான்.காந்தியிடம் "நல்லா படிப்பியா?" கேட்டதற்கு நல்லா படிப்பேன்னு காந்தி சொன்னான்.அடுத்த கேள்வி "உங்கப்பாவ உனக்கு பிடிக்குமா" காந்தி ரொம்பன்னு சொன்னான்.அடுத்து "நீ எந்த காரணத்துக்காகவும் படிப்பை நிறுத்தக் கூடாது சரியா?" கேட்டதுக்கு காந்தி "பயப்படாதீங்க மாமா,நான் கப்பலோட்டியாக வருவேன்" பதில் சொன்னான்.ரவி கடையில் ஒரு பக்கம் வறுத்துக் கொண்டிருக்கும் மீனின் ஒரு துண்டைக் கொண்டு வந்து காந்தியிடம் கொடுத்தான்.மணியும் குமாரும் பேசிக் கிட்டாங்க"தெரிக்குது தெரிக்குதுனு கத்துது சனியன் நம்ம அவஸ்த புரியாம அதுக்குப் போய் மீன் துண்டக் கொடுக்குறான் பாரு".

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (6-Dec-16, 9:31 am)
சேர்த்தது : சொநேஅன்புமணி
Tanglish : meen thundu
பார்வை : 344

மேலே