அமெரிக்காவில் ஒரு காதல்

எங்க ஊரு அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் உள்ள செயின்ட் பால், இந்த கதை அமெரிக்காவுல பிரிடிஷ்காரன் தன்ர கடைய விரிச்சி கல்லா கட்ட முன் நடந்தது.

அதுவொரு அழகிய கிராமம் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல்னு கோதுமை செடிங்க சில இடத்துல வளர்ந்து அறுவடைக்கு தயாராகி தங்கம்கொழிக்கும் பூமியா இருக்கும், இதனாலேயே பக்கத்து ஊர்கார சிகப்பனுங்களுக்கு (பின்னானுல வரலாறுல அவனுங்கல சிகப்பு இந்தியன் சொல்றாங்க நமக்கு ஏன் அது) அதுல ஒரு கண்ணு, நாங்களும் விவசாயம் பண்ணி நல்லாத்தான் வாழ்ந்திட்டு இருந்தோம் எவன் கண்ணு பட்டுச்சோ இப்படி சிதறி சின்ன பின்னமா ஆகிட்டோம்

எங்க ஊரையும் அவங்க ஊரையும் பிரிச்சது ஒரு குளம் தான் அந்த குளத்துக்கு தண்ணி மிஸ்ஸிஸிப்பி நதில இருந்துதான் கிடைச்சுது எங்க ஊர செழிப்பா வச்சிக்க காரணமா இருந்ததே அந்த குளமும் நதியும்தான் அதுக்காகவே அந்த குலத்துக்கும் நதிக்கும் ஒண்டியபடி பக்கத்துல கோயில் எழுப்பி அத எங்க குலதெய்வமா வணங்கி வந்தோம் அதற்கு வருஷா வருஷம் திருவிழா நடத்தி பூஜை செஞ்சி ஊர் பக்கத்துல உள்ள காட்டுல வாழற பைசன் இன எருமையை பலிகொடுப்போம்.

திருவிழா நடக்கும் போது பக்கத்து ஊர்ல உள்ள எல்லோரும் எங்க ஊர் வந்து அதவேடிக்கை பார்க்கிறது வழமை அப்படி ஒரு திருவிழாதான் எங்க ஊர் பாண்டியும் பக்கத்துக்கு ஊர் மார்த்தா பெர்ரியும் ஒருத்தர ஒருத்தர் சந்திசிக்கிட்டாங்க அதுக்கு பிறகு அடிக்கடி அவங்க ஊர் குளக்கட்டுல இருக்கிற பைன் மரத்திற்குகிழ சந்திச்சு அவங்க நட்ப வளர்த்து காதல் ஆக்குனாங்க, நீர்கலந்த இதமான காற்று கிளியும் குயிலும் கொஞ்சிக்கொள்ளும் சத்தத்தில் இவர்களின் சத்தம் அடங்கி போனது அழகிய குளக்கரை பைன்மர வாசம் அமெரிக்கா தேசம் முழுக்க வீசியது, இவர்களின் காதல் சரித்திரத்தில் இடம்பெற போகிறது என்று தெரியாமலே இவர்களின் அன்பு பிரவேசம் இருந்தது காதலுக்கு ஏது மொழித்தடைகள் மொளனமே மொழியானது.

எல்லா காதலுக்கும் உள்ள பரம்பரை வியாதி இவர்கள் காதலுக்கும் விதிவிலக்கா என்ன இவர்களையும் சாதியும் குலமும் பிரித்து வைத்தன பக்கத்து ஊர் தலைவன் இவர்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை பிரிந்திருக்கும் போதுதான் காதல் அதிகரிக்கும் என்கிற சூட்சுமம் அறியாதவர்கள் அவர்கள் என்ன செய்ய அவர்களின் நாடி நரம்புகளில் சாதிவெறி ஏறி இருந்தது காலம் அதற்கு நல்ல பாடத்தை சொல்லி கொடுத்தது.

பிரிந்து இருந்த காதலர்கள் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர் தாம் சந்திக்கும் இடமாக அந்த குளக்கரை பைன் மரத்தை தேர்தெடுத்தனர். தாம் எப்போதும் தகவல் சொல்லும் புகை மூலம் செய்தி பரிமாறினர்.

நிற்க.... நான் முன்பே சொன்னது போல் அமெரிக்காவில் இன்னும் ஆங்கிலேயன் தன் பொன்னான காலை வைக்க வில்லை உலகம் எவ்வளவு பெரியது என்று இன்னும் எங்கள் கண்களுக்கு தெரியவில்லை எம்மை போல் பலர் அறிவீனர்களாகவே இருக்கின்றனர், அமெரிக்கா முதல் அவுஸ்த்ரேலியா வரை எவ்வளவு பாகுபாடுகள் கறுப்பென்றும் வெள்ளையென்றும் உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் மனிதனை மனிதனாக பார்க்காத மாட்டு ஜென்மங்கள் சரி இனி கதைக்கு வருவோம்.

குயில்கள் இரண்டும் குளக்கரை பைன் மரநிழலில் சந்தித்து கொண்டன எங்கே போவது என்ற திட்ட வரைபுகள் எதுவும் இல்லை குயில்களுக்குத்தான் கூடுகட்ட தெரியாதே அவை அமெரிக்காவாக இருந்தால் என்ன ஆண்டிபட்டியாக இருந்தால் குயில்கள் குயில்கள்தானே தஞ்சம் தரவும் காக்கை கூடுகளும் இல்லை காணத்தூரம் பறக்க சிறகிலும் வலுவில்லை.
தற்கொலை பண்ண கோழைகளும் இல்லை

அருகில் பைன் மரம்.. தூரத்தில் கோயில்..... குளம்..... மிஸ்ஸிஸிப்பி நதி.....
இதன் பிறகுதான் இவர்கள் கதை வரலாறு ஆனது அந்த காதல் ஜோடி சரித்திரம் படைத்தது
இப்போது இவர்கள் கதை வரலாற்று பக்கங்களில் அழிந்திருக்கலாம் இன்னும் ஓடிக்கிக்கொண்டிருக்கும் மிஸ்ஸிஸிப்பி நதியும் பைன் மரங்களும் இவர்களின் கதை சொல்லும் சாட்சியங்கள்
இப்போதும் இவர்கள் என்ன ஆனார்கள் என்று இவர்கள் சிலை வைத்து பூஜரிக்கும் அந்த கோயில் பூசாரிக்கூட தெரியாது.

யாவும் கற்பனை

எழுதியவர் : Ijas Mohamed (5-Dec-16, 3:30 pm)
சேர்த்தது : இஜாஸ்
பார்வை : 511

மேலே