கவியின் அழகான வாழ்க்கை

ஒரு நடுத்தர குடும்பத்தில் வாழும் ஒரு பெண் பாசத்திற்காக ஏங்கும் அவளின் வாழ்கை வரலாறு ;

ஒரு அழகான கிராமம் அந்த கிராமத்தில் கவி என்ற பெண் வாழ்ந்து வந்தாள் ,அவள் குடும்பம் நடுத்தரமான குடும்பம் .கவி மிகவும் அழகானவள் ,பண்பானவள் ,மிகவும் பாசமானவள் . அவளை அந்த கிராமத்தில் பிடிக்காத்தவர்களே இல்லை ,அந்த அளவுக்கு மற்றவருடன் பாசமாக பழகுவாள் , ஆனால் அவள் வாழ்வில் அவளுக்கு கஷ்டத்தை மட்டும் தான் அனுபவித்தாள் . கவி தன்னுடைய தாய் , தந்தை, பாசத்திற்காக ஏங்குவாள் , ஆனால் அது அவளுக்கு கிடைக்கவில்லை. கவிக்கு அவள் அப்பா என்றால் உயிர் , அவர் தன்மீது பாசம் காட்டவில்லை என்று தெரிந்தும் அவரை அவள் யாரிடமும் விட்டு கொடுக்க மாட்டாள், நாட்கள் சென்றன அவள் கல்லூரி படிப்பும் முடித்தால். அவள் வீட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டாள் , காரணம் அவள் அப்பாவுக்கு மிகவும் பயப்பிடிவாள், கவியின் தந்தை மிகவும் கண்டிப்பான பேர்வழி ,தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் தான் தன் குடும்பம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் . கவியும் அப்படி தான் வளர்ந்தால் , வாழ்ந்தாள். தன்னுடைய சின்ன சந்தோசங்களை கூட அவள் மனதுக்குள்ளே போட்டு புதைத்து விடுவாள் . சக தோழிகளுடன் வெளியில் செல்ல ஆசை படுவாள் ,அவர்களை போல் ஆடை அணிய விரும்புவாள் ஆனால் இது எதுவும் அவள் வாழ்வில் நடக்கவில்லை . காலம் சென்றது அவளுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்ய அவள் தந்தை முடிவு செய்தார். மாப்பிள்ளையும் பார்த்தார் அவள் விருப்பத்தை சரியாக அவளிடம் கேட்கவில்லை , அவளோ அப்பாவை மறுத்து பேச மனமில்லை,திருமண தேதி முடிவாகிறது . கவிக்கு ஒரு பக்கம் முன் பின் யார் என்றே தெரியாத நபரை திருமணம் பண்ண போகிறோம் என்ற பயம் ஒரு பக்கம், மறு பக்கம் தன்னுடைய உயிராக நினைத்த தன் தந்தையை விட்டு பிரிய போகிறோம் என்ற பயம் மறு புறம் . அவள் திருமணமும் நல்ல படியாக முடிந்தது , அவள் கணவன் பாலன் மிகவும் நல்லவன் , அது கவிக்கு போக போக தான் புரிந்தது ,அவள் எதிர் பார்த்து இழந்த அத்தனை சந்தோஷங்களும் பாலன் மூலம் அவளுக்கு கிடைத்தது . அவளுடைய புகுந்த வீடு அவளுக்கு கிடைத்த வரம் ,அன்பான கணவன் , அம்மா பாசத்துடன் மாமியார், தன்னுடைய தந்தையை விட்டு பிரிந்து வந்த எண்ணமே கவிக்கு வராத அளவுக்கு அவளுக்கு இன்னொரு தந்தையாக மாமனார் ,என அவள் சந்தோசமாக வாழ்வை நகர்த்தி கொண்டிருந்தாள் ,அவள் கர்ப்பமானாள் ,ஒரு பெண் கர்ப்ப காலத்தில் தனக்கு புடித்தவர்களுடன் தன் மீது அன்பாக உள்ளவர்களிடம் தான் இருக்க வேண்டும் என்று விரும்புவாள் ,அதற்கு எந்த குறையும் இல்லாமல் பாலன் அவளை தாய்க்கு தாயாக அவளை எந்த குறையும் இல்லாமல் அவளை பார்த்து கொள்கிறான் . கவிக்கு பசிக்கும் முன்பே அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிடுகிறான் அவளுக்கு என்னவெல்லாம் புடிக்கும் என்று தெரிந்து கொண்டு அதை எல்லாம் செய்கிறான் . அவளை தன் மடியில் படுக்க வைத்து தூங்க வைக்கிறான் . அவளுக்கு 7 மாதங்கள் ஆனவுடன் ,இரவில் அவள் கால்களுக்கு இதமாக வெந்நீர் வைத்து ஊற்றுகிறான் , அவள் வயிற்றுக்கும், கால்களுக்கும் எண்ணெய் தேய்த்து விடுகிறான் ,சிறிது நேரம் அவள் கை பிடித்து நடக்கிறான் . கடைசியாக அவளுக்கும் அவள் வயிற்றில் இருக்கும் தனது குழந்தைக்கும் குங்கும பூ போட்டு பால் கலந்து கொடுக்கிறான் , அவளை உறங்க வைத்து விட்டு தன்னுடைய மனைவிக்கும் , குழந்தைக்கும் காவலாக அவள் உறங்குவதை பார்த்து ரசிக்கிறான் . அவளுக்கு 9 மாதங்கள் ஆகிறது வளைகாப்பு போட்டு கவின் பெற்றோர் அவளை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள் . பாலனோ அனுப்ப மனமில்லாமல் அனுப்புகிறான் ,கவியும் தனது அன்பான குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாமல் செல்கிறாள் . கவி மீண்டும் பாலனை சந்திப்பாளா ?

எழுதியவர் : விஜயஜோதி (5-Dec-16, 3:17 pm)
பார்வை : 322

சிறந்த கவிதைகள்

மேலே