அய்யா கோட்டையக் காணங்க அய்யா

அய்யா கோட்டையக் காணங்க அய்யா. கோட்டையைக் காணம்.
@@@
என்னய்யா வடிவேலு மாதிரி ஒளற்ர.
@@@@
அய்யா கரிகால் சோழன் கட்டின கல்லணை இருக்குதுங்களா?
@@@@
இருக்குதய்யா.
@@!@
அய்யா ராசராச சோழன் கட்டின தஞ்சாவூர் பெரிய கோயில் இருக்குதுங்களா?
@@@@@
இருக்குதய்யா.
@@@@@
அய்யா ராசராச சோழனோட மகன் ராசேந்திர சோழன் அவுங்க அப்பங் கட்டின கோயில் மாதிரியே அதவிடக் கொஞ்சம் சின்னதா கங்கைகொண்ட சோழபுரத்தில கட்டின கோயில் இருக்குதுங்களா?
@@!@!
யோவ்.. அந்த அணை, கோயிலுங்க எல்லாம் அரசு பராமரிப்பில நல்லா இருக்குதய்யா. அங்கெல்லாம் மிக முக்கிய பிரமுகர்கள் வந்தபோதெல்லாம் நாங்க பாதுகாப்பு (பந்தோபஸ்து) பணிக்கு போயிருக்கறோம். இப்ப உம் பிரச்சனை என்னன?
@@@@@
1800 வருசத்துக்கு முன்னாடி கரிகாலன் கட்டின கல்லணை இருக்குது; 1000 வருசத்துக்கு முன்னாடி ராசராச சோழனும் அவனோட மகன் ராசேந்திர சோழனும் கட்டின கோயிலுங்க ரண்டும் இருக்குது.
|@@@
ஆமா... இருக்குது. அதுக்கு இப்ப என்ன?
@@@@@
அய்யா அந்த மன்னர்கள் வாழ்ந்த கோட்டை கொத்தளங்கெல்லாம் காணமுங்க அய்யா. கண்டுபிடிச்சு குடுங்கய்யா.
@@@@@
ஏய்யா தொல்பொருள் துறைக்கே புரியாத விசயத்தை நாங்க எப்பிடியா கண்டுபிடிச்சுத் தரமுடியும்.
@@@@@
அய்யா நா இதச் சும்மா விடமுடியாதுங்கய்யா, விடமுடியாதுங்கய்யா. நா டிராஃபிக் ராமசாமி அய்யாகிட்டச் சொல்லி உயர்நீதிமன்றத்தில வழக்குத் தொடரச் செயவன் அய்யா. எவ்வளவு செலவானாலும் பரவால்லீங்க அய்யா. உச்சநீதி மன்றம் வரைக்கும போயி கோட்டைங்க காணாம போனதக் கண்டுபிடிக்க விடமாட்டங்கய்யா!

@@@@@
யோவ் 144 இந்த ஆளப்பிடிச்சு வாயிமேல ஒரு குத்துவிட்டு வெளியில தள்ளுய்யா.
@@@@
வேண்டாம் அய்யா வேண்டாம். நாம் போறன். நீதிமன்ற அவமதிப்பு வழக்குல உங்கள மாட்டிவிட்டு இடைநீக்கக உத்தரவு வாங்காம நா ஓயமாட்டேன். வர்றன்யா வர்றேன். திரும்பி வர்றேன் நீதிமன்ற உத்தரவக் கையில வாங்கிட்டு.

எழுதியவர் : மலர் (7-Dec-16, 1:58 am)
பார்வை : 337

மேலே