மறைந்த மாபெரும் தலைவிக்கு அஞ்சலி
அவரை அம்மாவென்று அழைக்காத அம்மாக்களில்லை
அப்பாக்களும் அவரை அம்மாவென்றே அழைத்தனர்
ஆம் அவர் தம் அயரா மக்கள் சேவையால்
தமிழக மக்கள் மனதில் அம்மாவாய் பதிந்துவிட்டார் அன்றே
என்று தமிழகத்தை பொறுப்பான முதல்வராய் அளவந்தாரோ அன்றே
பள்ளிப் படிப்பிலும் முதல்வர் அம்மா
பின்னே திரை உலக தாரகையாய் இருந்தபோதும்
முதலவர் அவரே
இறைவன் செயல்தானோ இதுவென்பது போல்
திரை உலக நாயகி திரை உலகை விட்டுவிட்டு
தமிழ்நாட்டு அரசியலில் களம் புகுந்தார்
வெற்றி கொடி நாட்டினார் ,கோட்டையாய்ப் பிடித்தார்
கட்சியின் மா பெரும் தலைவியாய்
பாமரற்கு உண்மை பங்காளியாய் திகழ்ந்தார்
அரசியலில் தம் ஒப்பிலா திறமையை
அரசியல் ஜாம்பவான்களே புகழ திகழ்ந்தார்
இரும்பு மனிதராய் கட்சியை தன
திறமையில் அடக்கி வைத்திருந்த அரசியல் மேதை
அம்மாவை தெய்வமாய்ப் போற்றி வந்தோர்
தமிழ் நாட்டில் ஏழை எளியவர்கள் பல கோடி
அவர்கள் மனதில் என்றும் அவர் தெய்வமே
இதை மாற்ற எவராலும் முடியாது
அம்மா என்ற அந்த ஜெயலலிதா அவர்கள்
நேற்று மறைந்து விட்டார் காலனின் வஞ்சகத்தால்
ஆனால் அவர் நம் தமிழ் நாட்டு மக்களின்
உள்ளத்தில் தாயாய், தெய்வமாய் வசித்திடுவார்
நல்லோர் அழிவதில்லை என்றும்