மாண்புமிகு அம்மா கவிஞர் இரா இரவி

மாண்புமிகு அம்மா ! கவிஞர் இரா .இரவி !

ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்ணாய் இருந்தும்
ஆண்களை ஆதிக்கம் செய்த பெண்சிம்மம் நீ !

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை
எதிர்த்து உலகிற்கு பறை சாற்றினாய் !

இனவெறியன் இராஜபட்சேயின் முகத்திரையை
அகற்றி அகிலத்திற்கு அம்பலப் படுத்தினாய் !

பொருளாதாரத் தடை விதைக்க வேண்டும்
பொங்கி எழுந்து குரல் கொடுத்தாய் !

எல்லோரும் பயந்த ரவுடி இராஜபட்சே
உன்னைப் பார்த்துப் பயந்து நடுங்கினான் !

சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி
சிம்ம சொப்பனம் ஆனாய் இராஜபட்சேக்கு !

நடுவர் மன்றத்தின் தீர்ப்பை போராடி
நடுவணரசு அரசிதழில் வெளியிட வைத்தாய் !

உயர் குலத்தில் பிறந்தபோதும் நீ
உன்னத இட ஒதுகீட்டை ஆதரித்தாய் !

சமூகநீதி காப்பதில் துணை நின்றாய்
சமமாய் மக்களை மதித்தாய் நீ !

காவிரிக்காக உச்சநீதிமன்றத்தில் போராடி
காவிரியில் நல்ல தீர்ப்புகளை பெற்றாய் !

லஞ்சம் ஊழலை மட்டும் ஒழிக்கவில்லை
தமிழ் வழிக்கல்வியை ஏற்கவில்லை !

மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்திற்கு
நான் எழுதிய விமர்சனம் கண்டு என்னை !

அலைபேசியில் அழைத்து பாராட்டிய உந்தன்
அன்புக்குரல் நினைவில் என்றும் பசுமையாக !

தமிழ்நாட்டின் வரலாற்றில் உன் பெயர்
தன்னிகரில்லாப் பதிவு நிலைக்கும் உன் புகழ் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Dec-16, 8:16 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 137

மேலே