அம்மாஆஆஆ

ஓரு அழகான ஊர்
எழில் கொஞ்சும் பசுமையும் ஆட்சி செய்யும் இயற்கை கிராமம்
எப்பொழுதும் அந்த வீட்டில் ஒரே சத்தமாகவே இருக்கும் காரணம் அங்கு அண்ணனும் , தங்கையும் இருக்கிறார்கள் பின்ன சொல்லவா வேனும் , எப்பொழுதும் எதாவது விசியத்திற்கு சண்டை நடந்து கொண்டே இருக்கும் அதனால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது பெரியதாக தெரியவில்லை , அவர்களை சமாதானம் செய்யவும் யாரும் வரமாட்டார்கள் ...
தங்கச்சி பயங்கர கெட்டிக்காரி அதே நேரத்துல மனிதாபிமானமும் கொஞ்சம் கூட அண்ணனை விடவே
இருவரும் எதாவது பொருளுக்கு அடித்துக் கொண்டே இருப்பார்கள் கடைசியாக அவர்களுக்குள் சண்டை வந்தது டீவி ரிமோட்டுக்காக தான், அதுக்கு அப்புறம் தங்கச்சி ஹாஸ்டல் போயிட்டா வீடே வெறுச்சோடி போயிடுச்சு அந்த அண்ணணுக்கு தங்கச்சியோட அருமையும் , பாசமும் அப்போ புரிஞ்சது இந்த கதைல வர்ற அண்ணண் பேரு கலைஞர்
தங்கச்சி பேரு ஜெ அம்மா
அநேகமா ரீமோட்டுக்காக சண்டை போட்ட தங்கச்சி ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டா என்ன மனநிலை இருக்குமோ அதே நிலமை தான் கலைஞருக்கும் இருக்கும்னு நினைக்கிறேன்

எழுதியவர் : க.நாகராணி (7-Dec-16, 10:02 pm)
சேர்த்தது : நாகராணி
பார்வை : 516
மேலே