தூரல் தேடும் மேகம் அத்தியாயம் I
சில்லென்ற மலைச்சாரல் கொட்டும் மலை அருவி, எங்கும் எதிலும் பசுமை, அங்கே ஒரு முருகன் கோவில், தோழிகள் கிண்டல் செய்ய உறவினர்கள் புடை சூழ, தன் மனம் விரும்பிய மணாளனுடன் திருமணம்.
ஸ்வேதா எந்திரிமா…. பாப்பா எந்திரி…..மணி 5 ஆச்சு… பியூட்டிசியன் வந்துருவா… சீக்கிரமா ரெடி ஆனா தானே நல்லாயிருக்கும் எந்திரி தண்ணி கொதிச்சு கிடக்குனு அம்மாவின் குரல்.
சட்டென்று கனவு கலைந்தது..புன்சிரிப்புடன் எழுந்தால்..ச்சே கனவில் வந்த இடத்தில் திருமணம் நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கொண்டே எழுந்தாள்.
குளித்து முடித்து புடவையை கட்டினாள். இன்று ஸ்வேதாக்கு நிச்சயதார்த்தம். மாப்பிள்ளையை இதுவரை நேரில் பார்த்ததில்லை, போட்டோவில் பார்த்ததோடு சரி. தன் அப்பாவிற்க்கு பிடித்த வரன் என்று சம்மதித்தாள்..இந்த காலத்தில் இப்படியொரு பைத்தியகாரியை யாரும் பார்த்திருக்க முடியாது..
உடன் வேலை பார்க்கும் ஆசிரியைகள் கேலி செய்தனர் போட்டோவில் கழுதையை குதிரையா மாத்திருவாங்க. ஏன் ஸ்வேதா மிஸ் முதல்லயே நேர்ல பாத்துட்டுத்தானே நீங்கள் நிச்சயத்துக்கு OK சொல்லிருக்கனும் என்று ஸ்வேதாவின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தினர்.
பியூட்டிசியன் வந்து ஸ்வேதாவை அழகாக அலங்கரித்தார். ஸ்வேதாவின் தங்கையும் அவளது தோழியும் கேலி பேசி கொண்டிருந்தனர் அனைத்து உறவினர்களும் வந்து சேர்ந்தனர். ஸ்வேதா என்ன தான் வெளியே சிரித்து பேசினாலும் உள்ளுக்குள்ளே நடுங்கியது மாப்பிள்ளை எப்படி இருப்பாரோ… என்னவோ…. என்று..
சரியாக 9 மணி மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். மாப்பிள்ளையின் பாட்டியும் தாத்தாவும் ஸ்வேதாவின் அறைக்கு வந்து அவளை பார்த்து நன்றாக பேசினர்.அம்மா இல்லாத பையன் நீ தாம்மா நல்லா பாத்துக்கனும் எங்க புள்ள அதான் அவனோட அம்மா செத்து 5 வருஷமாச்சு.
நீ தான் மூத்த மருமக குடும்பத்த பொறுப்பா பாத்துக்கனும் என்று கூறி சென்றனர்.
ஸ்வேதாவிற்க்கு படபடவென்று வந்தது. இன்னும் மாப்பிள்ளையை கண்ணுல காட்டுல அதுக்குள்ள இவ்ளோ பேசுறாங்களே என்று படபடத்தது மனசு.
வீட்டு மாடியில நிச்சயதார்த்தம் முதல் நாளே ஸ்வேதாவும் அவளது தங்கை நிவேதாவும் மாடியை அலங்கரித்தனர். பொண்ணும் மாப்பிள்ளையும் நிற்கும் இடத்தில் அழகாக வண்ணக் காகிதங்களைக் கொண்டு பெயர்களை எழுதினர்.
அனைவரும் அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர் Super ஆ இருக்கு Decoration என்றனர்.
பொண்ண கூட்டிட்டு வாங்க மாடிக்கு குரல் கேட்டது. ஸ்வேதாவை அவளது அத்தையும் தோழிகளும் அழைத்துச் சென்றனர். முதல் முறையாக மாப்பிள்ளையை பார்க்கப் போகிற படபடப்பு பார்த்தாள்..
போட்டோவுக்கும் நேரில் பார்க்கும் உருவத்திற்க்கும் சம்மந்தமே இல்லை. கண்கள் இருட்டின ஒரு நிமிடம் மூச்சு நின்றது. குட்டையான குண்டான உருவம், படிந்து வாரிய தலை, நிறமும் கம்மிதான்..
தோற்றம் என்ன தோற்றம் அழகா சோறு போட போகிறது என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
பாவம்..தோற்றத்தை வைத்து ஒருவரை எடை போடக்கூடாது என்று ஸ்வேதாவுக்கு நன்றாக தெரிந்திருந்தது..
நிச்சயம் நடந்தது இரு வீட்டாரும் தாம்பூலம் மாத்திக் கொண்டனர்..மாப்பிள்ளை வீட்டார் 10 பவுன் நகை போட்டனர் ஸ்வேதாவுக்கு எங்கும் நடந்திராத ஒன்று இது. நிச்சயத்தன்னிக்கே நகை போட்றாங்க பெரிய ஆளுகப்பா.. ஸ்வேதாவின் உறவினர்கள் பொறாமைக் கொண்டு பேசுவது ஸ்வேதாவின் காதுக்கே கேட்டது.
போட்டோக்காரன் போட்டோ எடுத்தான் இருவரையும், நிச்சயதார்த்தம் நன்றாக முடிவடைந்தது.
மாப்பிள்ளை ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. சாயங்காலம் ஆகிவிட்டது. மாப்பிள்ளையின் தாத்தா,பாட்டி,அப்பா, அனைவரும் பேசினர்.
மாப்பிள்ளையிடம் ஸ்வேதாவின் தங்கை நிவேதா இந்த Decoration நாங்க இரண்டு பேரும் தான் பண்ணிணோம் என்றதற்கு ம்…என்று மட்டும் பதிலளித்தார்..
நிவேதாவிற்கு சங்கட்டம் ஆனது..ஸ்வேதாவுக்கு அழுகையாக வந்தது.யாரிடமும் மாப்பிள்ளை பேசவேயில்லை..ஒரு சிரிப்பு கலகலப்பு ஒன்றுமில்லை முகத்தில்.
போகும் நேரத்தில் புது Cell phone gift – ஆக கொடுத்து விட்டு சென்றார்.
ஒரு வேளை போனில் நன்றாக பேசுவாரோ என்று எண்ணினாள் ஸ்வேதா.
அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை ஸ்வேதாவுக்கு.. எடுத்த முடிவு சரியா தவறா என்று குழம்பிப்போனாள்.
(இது தொடர்கதையாக தொடர விரும்புகிறேன்... வாசகர்களின் விமர்சனங்களை பொருத்து..)