உள்ளத்தில் உதிரம்

கண்ணில் காதல் தெரிகிறதே
கனலாய் ஏனோ சுடுகிறாய்?
உதடுகள் சொல்ல துடிக்கிறதே
உள்ளே ஏனோ மறைக்கிறாய்?
காதலுக்குக் கிடையாது
சாதி பிரிவு இனம்
காதலிக்க போதுமடி
ஆணின் பெண்ணின் மனம்
நினைவுகளோ தொடர்கிறதே
நிழலாய் உன்னை தினம்
நெஞ்சுக்குள்ளே வலிக்கிறதே
புதிதாய் பிறந்த ரணம்
உள்ளத்தின் உள்ளே
காதலை மறைக்காதே!
மௌனத்தின் பிடியில்
என்னை வதைக்காதே...
என் நிழலும் தொடுவது வேண்டாமென
இருளில் வாழ்வது நியாயமா??
என்னை பிரிந்து செல்கிறாய்
என்னுயிர் இதனை தாங்குமா??
காதலுக்குக் கண்ணீரில்தான்
இன்பம் கிடைக்கிறதோ! அதன்
காரணம் தான் கண்களிலே
கண்ணீர் சுரக்கிறதோ!!