எழுந்து வா

தன்னுடலைத் தான்சுமக்க
வந்தமைந்த கால்கள் இருக்க
தரணியிலே யாருமில்லை
என்று அழத்தேவையில்லை


உன்னுடலில் உன்னோடு
துணைவரும் கால்களுண்டு
உரம் கொண்டு எழுந்துவா
உலகை வெல்வோம்
உறுதிகொண்டு


தேய்ந்த பிறை வளர்வதுண்டு
முழுமதியாய் மலர்வதுண்டு
அந்தகார இருள் கிழித்து
அகிலம் வெளிக்க
ஒளி கொடுப்பதுண்டு


இரவு வந்து மறைவதுண்டு
இருள் தொலைந்து
வான் வெளிப்பதுண்டு
வந்த துன்பம் முடிந்து போகும்
வாழ்வில் ஒரு வசந்தம் வீசும்


கூடி ஒரு காலம் வரும்
கோடி பலம் தேடி வரும்
வாடி நின்ற பயிர் வளர
வசந்தகால வேளை வரும்


ஓடி ஒரு கூட்டம் வரும்
தேடி உனை வாழ்த்த வரும்
கூடிவரும் கூட்டம் கொண்ட
குணங்களை நீ அறியவரும்


காலம் வரும் காலம் வரும்
உனக்கும் ஒரு காலம் வரும்
உறுதிகொண்டு எழுந்து நின்றால்
ஞாலமதில் உனக்கும் ஒரு
பாதை வரும்

எழுதியவர் : திவினோதினி (16-Dec-16, 4:24 pm)
Tanglish : ezhunthu vaa
பார்வை : 328

மேலே