மாறுகிறதே உலகம்

ஒன்றாக இருந்த நிலமெல்லாம் தனித்தனியாய் தன் போக்கிலே நகர்ந்து எவ்வாறு ஏழு கண்டங்களாகப் பிரிந்தனவோ,
அவ்வாறே மீண்டும் இணையத் தொடங்கியுள்ளது போல்,
ஒரு தாய் வயிற்றில் உதித்த ஞானில மக்கள் தனித்தனியாய் பிரிந்தே வாழ்ந்தாலும்,
ஒன்றுபடத் தொடங்கியுள்ளனர்,
வாழ்க்கை முறையாலேயே...

உண்மையைக் குழித்தோண்டியே புதைத்தாலும் வெளிப்பட்டே தீரும்
வெளிச்சமாய்....

மாற்றம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதைச் சிந்தித்தே தீர்மானியுங்களேன்....

கெட்டவர்களின் ஆளுமையில் இருந்து படிப்படியாகவே விடுபடுகிறதே இந்த உலகம்...

அழிவில்லையென்றே ஆட்டம் போட்டோரையெல்லாம் காலன் வந்தே கவர்ந்து செல்கிறான்....

மனிதர்களுக்குரிய பண்புகளை விடுத்தே,
கொடிய மிருகங்களின் குணங்களை தனகத்தே உரித்தாக்கியவரெல்லாம் உதிரிகளாய் மாறவே, காலம் தன் கடமையை செய்கிறதே....

காண்கிறேன் பல நல்லுள்ளங்களை வெளிப்படையாய்...

எப்படி வாழ வேண்டுமென்றே எடுத்துரைக்க வந்தவர்,
தன் வாழ்வின் அனுபவங்களைப் பகிர்கையில் தன் கண்ணீரைச் சிந்தியே, என் கண்களையும் ஈரமாக்கிவிட்டார்...

நல்ல உணர்வுகளின், ஆக்கப்பூர்வமான கருத்துகளின் தாக்கம்,
மனித மனங்களில் நிச்சயமாக படிந்துவிடுகின்றனவே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Dec-16, 6:47 pm)
பார்வை : 1290

மேலே