வாழ்வு வரமாகும்
பட்ட மரம்கூட
விறகாகும் !
முதிர்ந்த இலைகூட
உதிர்ந்து சருகானால்
உரமாகும் !
செத்த மீன்கூட
உணவாகும் !
அண்ட சராசரமும்
ஆளும் ஆறறிவு மனிதா
உன் வாழ்வு எப்போது
வரமாகும் ?
தன்னலத்தை
தலைமுழுகி,
பிறர் நலனை
பேணிக்காத்து
உலகிற்கு நட்போடு
தோள் கொடுத்து
காதலுடன் கைகோர்த்து
பரிவோடு வாழ்ந்து வா!
உன் வாழ்வும்
ஒளி வீசும் !
வானம் வசப்படும் !
வாழும்போதே
சொர்க்கம் தெரியும் !
வாழ்வு வரமாகும் !