எங்கும் மகிழ்ச்சி

அக்கா பரீச்சைக்கு படி எரும
அப்படினு சொல்லும் போது பிடிக்கும்...

படிக்கறன் sis...
கொஞ்சமா தூங்கிக்கறன் sis
என்று கூறிட்டு
அடுத்த நாள் காலையில தான் எழுந்திருப்பங்கோ...

அடுத்த வாட்டி 10 வது rank தான் எடுக்கணும்.
2 வது rank லான் எடுக்கக் கூடாதுனு சொல்லும் பொழுது அப்பாவோட அன்ப பிடிக்கும்...

நானும் அப்பாட்ட சரிப்பா சரிப்பா
பாத்துக்கலாம்பா என்று காமெடி பண்ணுவன்.

இப்படி தானுங்க
எல்லாத்லயும்
சந்தோசமும் பாசமும் இருக்குது...

நானு ஸ்கூட்டி ஓட்டிட்டு பிரிஜ்ல போனங்க...

அங்க ஒரே கூட்டம்
சரினு நானும் போய் பாத்தேனுங்க...

பஸ் ஒன்னு கீழ டைவ் அடிச்சிட்டு இருந்ததுங்க...

ஒருத்தரு வந்து பாத்தும்
ஏனுங்க என்னாஞ்சுங்கோனு
கேட்டுபுட்டாருங்க...

(மனசுல கவுண்டமணி எண்ணம்.

கேக்கறான் பாரு கேள்வி கேன மாதிரி...
அதான் பஸ்ஸூ டைவ் அடிக்குதுனு தெரியுதுல்ல)

நாம உடனே
பஸ் ரொம்ப சுடாகிடுச்சினு
ஆத்திகிட்ருக்காங்கோ...
அப்படினு சொல்லிபுட்டு வந்து புட்டேனுங்கோ...

நாங்களான் யாரு???
😎😎😎😎😎...
தானேவ தாண்டி வந்தவங்க...
வர்தாவுக்கே சரி தான் சொன்னவுங்கோ...

எல்லா இடத்லயும் எல்லாம் கலந்து இருக்குமுங்கோ...
சிரிச்சிட்டே இருங்கோ...😊😊😊😊😊

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Dec-16, 11:51 am)
Tanglish : enkum magizhchi
பார்வை : 324

மேலே