பழசு

தீர்ப்பு எழுதிய பின் ..
தீர்ப்பு எழுத உதவிய pen உடைக்கப்படுகிறது .....

தீர்ப்பு எழுதிய pen இனி இந்த உலகத்தில் தீர்ப்புக்குள்ளாக்கியவர் இல்லை என்பதையும்
இனி அது யாருக்கும் உபயோகம் இல்லை என்பதை காட்டுவதற்கு...

பெண்ணே நீ சொல்லப்போகும் வார்த்தையும் ...
எனக்கு தீர்ப்புதான்...
அதனால் உடையப்போவது pen அல்ல...
பெண்ணே நீ குடியிருக்கும் இதயம் தான்....

பெண் : டேய் நீ என்ன love பண்றதுகூட பொருத்துக்குவேன் ஆனா நீ சொல்ற கவிதை இருக்கே ரொம்ப பழசு
இப்பெல்லாம் ink pen முடிஞ்சி எல்லாரும் ball pen பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்க ..

ஆண் : அதுக்கில்ல இதயம் உடைந்து விடக்கூடாதே என்பதற்காக சொன்னேன் ..

பெண் : டேய் இதயத்திற்கும் pen க்கும் என்னடா சம்பந்தம் ?? ஒன்னும் இல்ல நீ போய் கடந்த சில வருஷமா எந்த judge ஆவது தீர்ப்பு சொல்லி pen ஐ ஒடச்சிருந்தாலோ இல்ல யாராவது காதலுக்காக தற்கொலை பண்ணிருந்தாலோ சொல்லு..

ஆண் : அப்படி எதுவும் நான் கேள்விப்படல!!!!!

பெண் : அப்போ இனி மேலும் கேள்விப்படமாட்ட ..போய் தொலை...

ஆண் : அப்போ நீங்க என்ன love பண்ணலியா ...

பெண் :
உன்னை காதலித்தால் வரும் வேதனை..
அதில் துவங்கும் எனக்கு சோதனை...
வாழ்க்கையில் புரிந்து காட்டு சாதனை ...
சேலை உன்னை தேடி வந்து சேரும் வாழ்க்கை துணை...

ஆனா : என்ன எழுதுறதுன்னு தெரியாம நான் வந்தா அவ என்னையவெச்சே கவிதை சொல்றா !!!!!

எழுதியவர் : சாமுவேல்.. (18-Dec-16, 2:31 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 373

சிறந்த நகைச்சுவைகள்

மேலே