அச்சம் தவிர்

தாயின் கருவில் உதித்த மானூடனே.,
உயர்ந்து நில்.. துணிந்து நில்..,
கவலை உன்னைத்தொடும் போது காற்று நிரம்பிய பலூனாய் மாறாதே.., மாறாக
வானை பிளந்து செல்லும் ராக்கெட்டாக மாறு.. அனைத்தும் புகையாகி போகட்டும்.,
வெற்றி நோக்கி ஓடும் விந்தையே.., வெற்றிடமாய் மாறி போகதே.., உன்னுள் உலகைத்தேடு.., பலர் விரும்பும் பூந்தோட்டமாகும் வரை.
பெருமை கொண்ட பெண்ணினமே அடிமை சங்கிலியை உடைத்தெறி உன் அன்பால்..,
உன்னை சுற்றி நடக்கும் அநீதியை சற்றே பார்வையிடு சகலமும் சாத்தியமாகி போகட்டும்..
சறுகல் நிறைந்த வாழ்க்கையில்., அச்சம் தவிர் ஆனந்தம் கொள்...