இதுதான் சமூகம்
விதவை என்று
கதறி அழும் கட்சிகள்
விளைந்து போய் கிடக்கு
வீட்டுக்குள் பதுங்கி
வீரத்தை மறைத்து உம்
விடுதலையோ
தொலைந்து கிடக்கு
வீறுகொண்டு எழுந்து
விதவைக்கு முன்
உள்ள கோலம் புகுந்து
ஆலம் விருட்சமாகுங்கள்
இகழ்ந்து பேசியோர்
இளைப்பாறுவர் உன் நிழலில்
இதுதான் சமூகம்
இவர்களை படியுங்கள்
இருள் தொலைத்து வாழலாம்

