குரலிசை

தப்பான தாளம்
சேராத சுதி
ஏதேதோ ராகம்
ஏறா ஆரோகணம்
இறங்கா அவரோகணம்
எதுவும் பொருட்டில்லை
அவள் குரல் என்பதே போதும்
இசையெனக் கொள்வதற்கு...

எழுதியவர் : அருணா சுப்ரமணியன் (21-Dec-16, 8:06 am)
பார்வை : 158

மேலே