கேள்வி கேட்க வேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
அரசாங்கம் இட்டுவைக்கும் ஆணைப்படி கிடைக்கின்ற
==அதிகபட்ச சலுகைகளை அழகாக இழுப்பதற்கு
விரல்விட்டு எண்ணுதற்கு விருப்புற்று ஒருசிலரும்
==விரைவான வண்டியென வீதிவலம் செல்வாரே!
தரமாட்டோம் உமக்கதையே தானென்னும் மமதையிலே
==தான்றோன்றித் தனமாக தன்னலத்தில் பலபேரும்
வரமறுக்கும் மாட்டுவண்டி வகைசேர வேண்டுமென
==வந்தவழி மறந்தபடி வசைபலவும் சொல்வாரே!
அரசாங்கம் தரும்பணத்தை அவர்பணமாய் உருமாற்றி
==அடுத்துவரும் தேர்தலிலும் அவர்வெற்றி பெறுவதற்கு
பிரசாரம் செய்யாமல் பெருபுகழைத் தேடிக்கொள
==பிறப்பெனது உமக்கேன்றே பெரும்பாலும் பிதற்றுவரே!
வரலாற்றுப் பிழைசெய்து வாழ்வோட்டும் நரிகளுக்கு
==வகையான பதில்சொல்ல வேண்டுமெனில் பொதுமக்கள்
தரவேண்டும் நீரெமக்குத் தருகின்ற சேவைக்குத்
==தகுந்தபணம் தந்ததெவர் தானென்னும் பெருங்கேள்வி?
*மெய்யன் நடராஜ்