இசைக்குயில்

இசைக்குயில்



அழகிய சோலைக்குயிலே!
என்னை கவிஞனாக்கிய
கலாபக்காதலியே!
தனிமையி லிசைக்கவிட்டுப்
பரந்தாயே!.

மான் விழியே!
ஓர் அசைவில் நொருங்கச்செய்யும்
அற்புத புயலே,
மீண்டும் மீண்டும்
நொருங்க வரிந்துகட்டி
நிற்குதடி என்மனம்...

வின்னைத்தாண்டி
எவ்வித குயில்
வந்தாலும்,
உன்னைப்போன்று
ஓர்வித படைப்பை
கான்பதரிது.

ஆழம் பிழந்து ஊடுறுவிய
நம் காதல் நினைவுகள்
கைபிடித்து நிற்குதடி
என் கலாபமே,
உம் தேடல் பயனத்தைத்
தொடர...

பூவினது காதல் வரிகளை
காற்று அறியும்,
காற்றினது ஏக்கங்களை
பூ அறியும்,
யான் மீட்டும் சோககீதங்களை
நீ அறியாயோ!....

இன்னும் இசைப்பேன்
பாடுவேன் ,
உன் செவிகளுக்கு
எட்டும்வரை...
தேடுவேன் தொடருவேன்
நீ என் விழிகளுக்கு
எட்டும்வரை.....

இப்படிக்கு நான்
உன் இசைக்குயில்...😌😥

எழுதியவர் : ரா. சுரேஷ் (23-Dec-16, 9:37 am)
சேர்த்தது : ரா சுரேஷ்
பார்வை : 162

மேலே