எசப்பாட்டு - 07 யார்யாரோ பெத்த புள்ள

எசப்பாட்டு - 07

யார்யாரோ பெத்த புள்ள
நாட்டுமேல பற்றுவெச்சு
ராணுவத்தில் சேர்ந்திருக்கு
பாட்டியம்மா - நம்ம
ராணுவத்தில் சேர்ந்திருக்கு
பாட்டியம்மா

ஆமாண்டி ராக்கம்மா - நீ
சொல்வதெல்லாம் சத்தியம் தான்
பகலிரவு பாராம
பனிகொட்டும் வேளையிலும்
நாட்டு எல்லை காத்திருக்கு – நம்ம
நாட்டு மக்கள் நன்மைக்கு
ராக்கம்மா

பத்து புள்ள பெக்கச்சொல்லி
பவுசாக வாழச் சொல்லி
பட்டாளக் காரனுக்கு
கல்யாணம் பேசிவெச்சா
பொன்னம்மா - பொண்ணு
கல்யாணம் பேசிவெச்சா
பொன்னம்மா

பரிசம் போட்டு அடுத்த மாசம்
கல்யாண நாள் குறிச்சு
ஊரெல்லாம் பத்திரிக்கை
விநியோகம் செஞ்சிருந்தா
பொன்னம்மா - ஒனக்கும்
வீடு வந்து கொடுத்திருந்தா
பொன்னம்மா

யூரியிலே பாசறையில்
உறங்குகிற நேரத்திலே
ஊடுருவி எதிராளி
வீசிடுவான் வெடி குண்டு
தெரியாம போச்சேடீ
ராக்கம்மா- யாருக்குமே
தெரியாம போச்சாடீ
ராக்கம்மா

உசுர ரிழந்த பலபேரில்
பொன்னம்மா பேசிவெச்ச
பட்டாளக் கார பையன்
பலியாகி விட்டானாம்
பாட்டியம்மா - பையன்
பலியாகி விட்டானாம்
பாட்டியம்மா

என்ன புள்ள சொல்லுத நீ
கைகால்கள் பதறுதடி
சொன்னதெல்லாம் பொய்யின்னு
தலையில் சத்தியம் பண்ணு நீ
ராக்கம்மா - என் தலையில்
சத்தியம் பண்ணு நீ
ராக்கம்மா

நடந்ததெல்லாம் பொய்யாக
இருந்திருந்தா நல்லதுதான்
டீவீ யில செய்தியிலே
பாத்ததைத்தான் சொல்லவந்தேன்
பாட்டியம்மா - சன்
செய்தியிலே பாத்தேனே
பாட்டியம்மா

பூத வுடல் மரியாதை
முடிஞ்சதுமே நாளைக்கு
புதைகுழியில் வைப்பதற்கு
ஏற்பாடும் ஆயிடுச்சாம்
பாட்டியம்மா - எல்லா
ஏற்பாடும் ஆயிடுச்சாம்
பாட்டியம்மா

கண்ணியமா பேசிப் பேசி
காலமினி கடத்தாம
நுண்ணியம்மா எதிரிகளைத்
தாக்கி எலும்ப முறிச்சுடனும்
ராக்கம்மா - நாம
தாக்கி எலும்ப முறிச்சுடனும்
ராக்கம்மா

இறுதி மரியாதை
சடங்குகளில் பங்குகொள்ள
ஊரெல்லாம் திரண்டுருச்சு
பாட்டியம்மா - இந்த
ஊரெல்லாம் திரண்டுருச்சு
பாட்டியம்மா

பூத வுடல் மரியாதை
முடிஞ்சதுமே நாளைக்கு
புதைகுழியில் வைப்பதற்கு
ஏற்பாடும் ஆயிடுச்சாம்
பாட்டியம்மா - எல்லா
ஏற்பாடும் ஆயிடுச்சாம்
பாட்டியம்மா

இறுதி மரியாதை
சடங்குகளில் பங்குகொள்ள
ஊரெல்லாம் திரண்டுருச்சு
பாட்டியம்மா - இந்த
ஊரெல்லாம் திரண்டுருச்சு
பாட்டியம்மா

நாளைக்கு காலையிலே
நானு மங்கு போபோறேன்
வீர வணக்கம் சொல்லிப்புட்டு
வேகிறமாய் வந்துடுவேன்
பாட்டியம்மா - நான்
வேகிறமாய் வந்துடுவேன்
பாட்டியம்மா

போகையிலே என்னையுமே
கூட்டிக்கிட்டு போனயென்னா
நானும் அதில் கலந்துக்குவேன்
ராக்கம்மா - நானும்
அதில் கலந்துக்குவேன்
ராக்கம்மா

நிக்கக் கூட முடியாத
நிலையினிலே நீயிருக்க
எப்படித்தான் நிற்பாயோ
மணிக் கூறு கணக்காக
பட்டியம்மா - அங்கே
மணிக் கூறு கணக்காக
பட்டியம்மா

நாட்டுக்காக உயிர்துறந்த
பட்டாளக் காரனெல்லாம்
என்பிள்ளை போலத்தான்
ராக்கம்மா - என்
பிள்ளை போலத்தான்
ராக்கம்மா

நாட்டுப் பணியில் உயிர்துறந்த
வீட்டுக்காரன் பொஞ்சாதி
பேச்ச நீயும் தட்டாம
கூட்டிக்கிட்டு போகவேணும்
ராக்கம்மா - நீ
கூட்டிக்கிட்டு போகவேணும்
ராக்கம்மா

கட்டாயம் நான் வருவேன்
கூட்டிக்கிட்டுத் தான் போறே
சின்னப்புள்ள ஆனாலும்
மரியாதை செய்யணும் நான்
நிக்குதுக்கு தைரியத்தை
பாரத்தாய் தருவாளே -
ராக்கம்மா - நம்ம
பாரத்தாய் தருவாளே
ராக்கம்மா

- தர்மராஜன் வெங்கடாச்சலம்

எழுதியவர் : (23-Dec-16, 11:13 am)
பார்வை : 85

மேலே