முடிவு

வாழ்கை போராட்டமானது
போராட்டமே வாழ்க்கையானது
இதுதான் விதி என அயர்ந்தேன்
இருந்து என்ன பயன் என
உயிர் உகுத்தேன்
ஜெயித்துவிட்டோம் என்று மதி
எண்ணியது, வெற்றியின் அருகாமையில்
மறைந்தாய் என விதி சிரித்தது
மரணமே போரட்டத்தின் முடிவு என்றால்
பூமியில் மயானங்கள் தானே
மிஞ்சவேண்டும்?