உறவுகள்
உணர்வில்லாத உயிர்கள் உண்டா?
உறவில்லாமல் உணர்வுகளா?
உறவுகள் உங்களின் உரிமை
உங்களுக்காய் படைக்கப்பட்டவை.
உங்களுக்காய் வாழ்கிறவர்கள்.
உந்தன் உணர்வின் உயிராய்
தாய் தந்தை.
பாச மழையாய்
அக்கா தங்கை.
வீரத்தின் பலமாய்
அண்ணன் தம்பி
மானம் காத்திட
மாமன்.
ஆசைகளின் உறைவிடமாய்
அத்தை.
அன்பின் எல்லையாய்
தாத்தா பாட்டி.
இவர்களின்றி எத்தனை
உறவுகள் உங்களுக்காக!
உறவுகளின்றி உயிர் வாழ்ந்து என்ன பயன்?
உறவுகளை இழந்து
தனி மரமாய்
இவ்வுலகில் தவிக்கலாமா?
நம் உறவுகளை தேடுவோம்!
உறவுகளோடு சேர்ந்து வாழ்வோம்!
உறவே உலகம்!