நிரந்தரத்தைத் தேடி...

என்னுடையதென்று எதைச் சொல்ல
வந்தும் போயுமே இருக்கும் எல்லாமே

நிரந்தரத்தைத் தேடி நித்தமும் செத்து
நிம்மதியைத் தொலைத்தாலும்

ஏதோ ஒன்றுக்காய் எப்பொழுதும் ஏங்கி
ஏக்கமே வாழ்க்கையாய்ப் போக

ஒரு தலைக்குள் ஓராயிரம் ஆசைகள்
புழுவாய்க் குடைந்து கொல்ல

சலனமில்லா மனதைத் தேடி
சத்தமில்லாத யுத்தங்கள்...

இருப்பதற்கும் கிடப்பதற்கும்
தாராளமாய் இடமிருக்க

சொந்தமாக ஓர் நிலம் இருந்தால்
சொர்க்கத்தைக் கண்டது போலாக...

நாமிருப்பது எத்தனை நாளோ
இன்னொருவரைத் தேடித் துரத்தி

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இருந்தாலும்
ஒட்டி உறவாடுவதிலேயே கவனம் சிதைய...

நம் புண்ணான நெஞ்சத்திற்கும்
பொறுப்பு நாம் தானோ?

நிலத்தில் இல்லை பொருளில் இல்லை
நிரந்தர மாறுதல்களில் நீராய் ஓடி

நிலையில்லாத வாழ்க்கை புரிந்து
வாழ்வதும் எந்நாளோ?



எழுதியவர் : shruthi (7-Jul-11, 11:27 am)
சேர்த்தது : shruthi
பார்வை : 389

மேலே