உளமார்ந்த வாழ்த்துக்கள்

இருமாதத் தனல்க் காற்று புயலாய்
பாய்ந்து தென்றலாகி தணிந்துவிட்டது.

தென்றல் முழுமையாய் பாவிநின்றபின்
வெம்மைக்கு அங்கு என்ன வேலை.

விட்டு விடுதலைதான் இனி, சற்று
விலகியே ஓடும் இந்தக் காட்டாறு,

நீராவியாய் வான் மேகம் நோக்கி.
இன்பமாய் பிரிதலும் சுகமானதுதான்.

உன் வழி இன்பமாய் அமைந்து நிலைக்க
உளமார்ந்த வாழ்த்துக்கள்.

எழுதியவர் : jujuma (7-Jul-11, 11:42 am)
பார்வை : 410

மேலே