அன்று அவளும் நானும் இன்று நினைவும் வலியும்
ஒரு மாலை
வண்ணம் சூழ்ந்த வேளையில்,
பல ஜோடி
புறாக்கள் நிறைந்த
சாலையில்,
அவளுும் நானும்,
இடையில்
விழிகளின் சிறையில்,
பார்த்தேன் ரசித்தேன்,
நெருங்கிட துடித்தேன்,
நகர்ந்தேன் நெருங்கினேன்,
பாதையைத் தொடர்ந்தேன்,
கனவென்னும் பிடியில்
தொலைந்தேன்,
ஆதலால் காதலில் விழுந்தேன்.
அந்த அழகிய நொடிகள்
இருவருக்கும் இடையில்
அய்யோாாா....!!!
உலாவும் இடம் யாவும்
ஊஞ்சலாடும்,
நினைவுகள் ,
கற்பனையாய் ஊர ஊர ,
நொடிக்கு நொடி
வலியும் தேங்குகிறது...
அன்று காதலும் அவளும்
இன்பமும்,
இன்று நானும் கவிதையும் வலியும்.........
தொடரும்.....
ரா. சுரேஷ்