நீதியே நில்
![](https://eluthu.com/images/loading.gif)
நம்மை தடுக்க ஆண்டவனுக்கும் அதிகாரம் இல்லை...
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...!
என ஈசனிடமே வாதிட்ட பரம்பரை நாங்கள்...!
"நமனை" அஞ்சோம் ...!
கேவலம் இந்த புல்லுருவிகளை
கண்டு அஞ்சுவோம் ....?
அக்னியின் ஆதாரம்...
அந்த ஆதவனுக்கு முதல் நாள் மரியாதை...!
ஆண்டு தோறும் எங்கள் ஆகாரம் தர உதவும் காளைக்கு
இரண்டாம் நாள் மரியாதை...!
எங்கள் வீரத்தை எங்கும் எப்பொழுதும் பறைசாற்றிட
உற்சாகமாக அறங்கேரும் ...
"ஜல்லிக்கட்டு"...!
இங்கே...
யாரின் அதிகாரமும் செல்லாது..
ஆணவமும் பலிக்காது...!
நீதிமன்றமே நீ உன் மானம் காத்திட தமிழகத்தில் நுழைந்தது விடாதே...
இங்கேயாவது உன் மானம் காக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்...!