என் சாபம்

நான் மட்டும் காற்றாய் பிறந்திருந்தால்
உன் கார் கூந்தலை கட்டிக்கொண்டு கிடந்திருப்பேன்

மழையாய் பிறந்திருந்தால்
உன் மார்போடு புதைந்து போயிருப்பேன்

வானமாய் இருந்திருந்தால் வானவில்லை
உன் வீட்டு வாசலில் குடி வைத்திருப்பேன்

வண்ணமாய் பிறந்திருந்தால்
உன் கன்னசிவப்பில் கலந்திருப்பேன்

ஒலியாய் இருந்திருந்தால்
உன் கால் கொலுசோடு இணைந்திருப்பேன்

ஒளியாய் இருந்திருந்தால்
உன் கண் தீண்டும் தொலைவில் காட்சியாய் இருந்திருப்பேன்

மானிடனாக பிறந்தது நான் செய்த பாவம்!
உன் மணவாளனாய் பிறக்காததே என் சாபம்!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (26-Dec-16, 4:49 pm)
Tanglish : en saabam
பார்வை : 106

மேலே