பசி
திண்ணை கொண்ட முற்றம்!
விரிசலான செம்மண் சுவர்!
காய்ந்த ஓலையில் கூரை!
ஒற்றை அறை வீடு,
அறையின் மூலையில் மண் அடுப்பு!
அடுப்பில் கொல்லி புகை புகைக்க!
பானையில் உலை கொதி கொதிக்க!
கைபிடி அரிசி வெந்துகொண்டிருக்க!
இரு வயிறு பசித்துக்கொண்டிருக்க!
உலை பொங்க பார்த்திருக்கும் மகன் பசி பார்த்து,
தண்ணீரால் தன் பசி அணைகிறாள்
தாய் ஒருத்தி...