அம்மா அம்மா

(லேசா லேசா பாடல் மெட்டு)

அம்மா.... அம்மா....
உந்தன் வாழ்வே அதிசயம் அம்மா......
அம்மா..... அம்மா....
உந்தன் நேசம் ஒரு வரம் அம்மா.....

உந்தன் தோளில் நானும் சாய்ந்து இயுக்கையிலே.... இருக்கையிலே....
உன் மடி மீது படுக்கையிலே...
குறைகிறதே .....கரைகிறதே....
மனசுமையே.....

நான் பேசும் ஓர் பேச்சி
அதுவாச்சி உன் மூச்சி
உன் ரத்தம் எந்தன் உள்ளே உயிராச்சி...
உன் பாசம் ஒன்றே வாழ்வில் வழியாச்சி....

தாயன்பால் பூமி என்றும் சுழல்கிறதே.... சுழல்கிறதே...
தனிமையில் துணிவையும் அளிக்கிறதே
உனக்கெனவே .....உலகினிலே.... இணையிலையே.....
( அம்மா அம்மா)

ஈராண்டு உருண்டாச்சி
போர்வாழ்வும் கடந்தாச்சி
வௌிநாட்டு வாழ்வும் இன்று முடிஞ்சாச்சி
தாயுன்னை கண்கள் காண விழைந்தாச்சி....

வெவ்வேறு வலியோடு
நீரோடும் விழியோடு
நான் வாழும் வாழ்க்கை என்னை வதைக்கிறதே
உன் எண்ணம் ஒன்றே என்னை அழைக்கிறதே

கண்ணெல்லாம் கண்ணீர் பொங்கி வழிகிறதே...... வழிகிறதே....
உனை மனம் நினைக்கையில் கனக்கிறதே!
தவிக்கிறதே ......மடி சாய்ந்திடவே..... விழி தூங்கிடவே.....
( அம்மா அம்மா)

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (26-Dec-16, 12:18 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : amma amma
பார்வை : 301

மேலே