ஒருவிகற்ப இன்னிசை வெண்பா - கற்றல்

கற்றலின்றிக் காண்பரோ காசினியில் நன்னெறிகள்
வற்றாத நீரோடை வாழ்வியல் கல்வியாம்
மற்றைவழிச் செல்வங்கள் மங்கிடுமே மானிடரே
உற்றபய னுண்டோ உரை .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Dec-16, 6:24 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 64

மேலே