நன்றி என்றென்றும்
்நன்றி எ ன் ப து
உள்ளத்தாலும்,
உடலாலும்,
உணர்வுகளாலும்
ஒன்றித்து வரும் வார்த்தை
நன்றி என்பது
நல்ல செயலுக்காகவோ,
நல்ல சொல்லுக்காகவோ,
நல்ல பரிமாற்ற நலனுக்காகவோ,
நாம் பயன்படுத்தும் ஒரு அருமையான வார்த்தை
வருட இறுதியில் நிற்கும் நாம் ஒரு கணம் சிந்திப்போம்.
நாம் பெற்ற நலனுக்காக,
உடல் ஆரோக்கியத்துக்காக,
நல்ல குடும்பத்துக்காக,
அருமையான சொந்தங்களுக்காக,
மனங்கவர்ந்த மக்களுக்காக,
வேலை வாய்ப்புக்காக,
உயர்ந்த நட்புகளுக்காக,
சுபமான பயணங்களுக்காக,
மூத்தோர் உறவுகளுக்காக,
நம்மை நம்பினவர்களுக்காக,
நல்லவைகளுக்காக நன்றி சொன்னால் போதுமா ?
நாம் சந்தித்த சறுக்கல்கள்,
மனம் பாதித்த தோல்விகள்,
நீதி மறுக்கப்பட்ட தருணங்கள்,
எதிர்பாராத இழப்புகள்,
தோற்கடிக்கப்பட்ட நியாயங்கள்,
மனப் புழுக்கங்கள்,
நிறைவேறாத நினைவுகள்,
இவற்றையும் அசை போடுவோம்,
அக் கணங்களை மீண்டும் நினைத்துப் பார்ப்போம்.
நல்லவை நம்மை இறைவனை நினைக்கவும்,
அல்லாதவை நம்மை இறைவனை மன்றாடவும் அமையப் பெற்றன என ஆறுதல் அடைவோம்.
நன்றி என்ற அற்புத வார்த்தையை இரத்த நாளங்களில் இயக்கிடுவோம்.
நன்றி என்ற உன்னதமான உணர்வை உள்ளங்களில் குடியேற்றுவோம்.
நன்றி என்ற ஒளியை கடவுளின்
கரங்களில் காணிக்கையாக்குவோம்.