அறம் செய்ய விரும்பு மனமே
அறம் செய்ய விரும்பென்ற ஔவையின் வாக்கின் துணையால்,
அறமென்னும் ஞானத்தை பற்றிக் கொண்டு அதோடு ஒன்றாகக் கலந்த மனதை,
அறம் விட்டு அறுத்தெடுத்தல்,
இதயம் விட்டு
இரத்தம் முழுவதும்
வெளியேற்றப்பட்டு
இதயத்தின் துடிப்பை நிறுத்தலுக்கு ஒப்பானதே...
சுவாசம் உடலைவிட்டு பிரிந்துவிட்டால்,
உடலால் எப்பயனுமில்லையே...
அறநெறிகள் மனதைவிட்டு
பிரிந்துவிட்டால்,
மனதால் எப்பயனுமில்லையே...
சுவாசம் உடல்விட்டு பிரிந்துவிட்டால்,
உடலானது அழுகிப் போய் நாற்றமெடுக்குமே...
அறநெறிகள் மனம்விட்டு பிரிந்துவிட்டால்,
மனமானது அழுகிப் போய், அம்மனதோடு சேர்ந்த உடலும் நரக ரணம் அனுபவிக்குமே....
பிறர் மனம் புண்படாமல்,
நம் மனமும் புண்படாமல்,
வாழும் வாழ்வே, பண்பட்டோர் வாழ்வே...
அழகென்றால் ரசிக்கத் தானென்று பிறன்மனை
நோக்கும் மனம்,
அறத்திலிருந்து முழுவதுமாய் விலகிசென்று விடுகிறதென்பதே சத்தியமே...
வாழ்க்கையெனில் யாதென வாழ்ந்து பாரென்ற கருத்தைப்
பற்றிக் கொண்டு,
அறநெறியில்லா வாழ்க்கை வாழும் பலரை காண்கிறேன்,
இந்த நடைமுறை வாழ்வினிலே....
அவ்வாறு அவர்கள் வாழும் வாழ்க்கையில்
அவர்கள் செய்யும் செயல்களுக்கெல்லாம்
யதார்த்தங்களென்று
உரைப்பதையும் காண்கிறேனே....
அறம் செய்ய விரும்பென்ற எண்ணம் மனதில் தோன்றினால்
தானே,
அது சொல்லாகவும், செயலாகவும் வெளிப்படும்...