யாரறிவார்
எனது கனவுகள் திருடப்பட்டு
காலத்தின் கரங்களில் கைதியாகி நிற்க்கின்றேன்…
ஆற்றுவதற்கும் தேற்றுவதற்கும்
யாருமின்றி அனாதையாக நகர்கிறது.,
எனது பொழுதுகள்…
எனது இன்பங்கள்
யாருடைய சுரண்டலிலோ அபகரிக்கப்பட்டது…
நிஜங்கள் கானல்களாகி
எனக்காக எதுவுமேயின்றி காணாமல் போயின…
உரிமைகள்.,
எனைவிட்டு வெகுதூரமாய்…
விரக்தியின் விளிம்பில் விழித்துக் கொள்கிறேன்
உறங்குகின்ற பொழுதுகளில்லும் கூட…
வண்ண வண்ணமாய்
என் வாழ்வில் வருமென…
நான் காத்திருந்த தருணங்கள்
சுடுகாட்டில் எரிக்கப்பட்ட பூச்சரமாய்…
கல்லறை கட்டப்பட்டு
இரும்புக் கரங்களுக்குள் இறுக்கப்படுகின்றன…
அகவை எட்டியதால்.,
இளமைக் காலங்களே
என் வாழ்க்கைக்கு வலியாகிப் போனது…
தங்கக் கூண்டிலில்
தடுமாறும் பறவையாக…
வசதிகள் கொட்டிக் கிடந்தும்.,
வெளி வாழ்க்கைக்கு வழி பார்க்கின்ற
என் விழிகளின் கனவுகளை…
யார்தான் அறிவார்….?