எனது கோபம்
தேர் ஏரிச்சென்ற தேவதை அவளை
இனி தேடிப் பயணில்லை…
தேடிக் காணவேண்டும் என்ற ஆவலும்
இனி எனக்குத் தேவையில்லை…
ஆனால்…
என் காதல் போலியல்ல
அவளை நான் மறப்பதற்கு…
வற்றாத நதிபோல் அன்பு எனக்குள்
நேற்றுவரை நெஞ்சில் இருந்தது…
தூசியாக அவள் என்னை
துச்சமாக மதித்தாலும்.,
மாசில்லா காதல் எந்தன் மனதிற்குள்
மலர்ந்திருந்தது என்றாலும்…
அவளுக்கு ஏற்றவன் நானில்லை என
அவளே முடிவெடுத்துவிட்டாள்…
விலையற்ற வைரத்தை
தங்கத்தில் பதிப்பார்களே தவிர..,
தகரத்தில் பதிப்பதில்லை…
கொம்புத்தேனை
முடவன் விரும்பக்கூடாதா…?
அவனுக்கு கால்கள்தான் இல்லை.,
சுவைக்க நாக்குமா இல்லை…?
எண்ணத்தை ஈடேற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும்.,
எண்ணுவதையே தடைசெய்யும் பொல்லாத மககளாயிற்றே…
உண்மையை சொல்கின்றேன்…
அவள் செய்த நயவஞ்சகத்திற்காக.,
நெஞ்சத்திலிருந்த அவளது எண்ணத்தை
எப்போதோ தூக்கி எரிந்துவிட்டேன்…
இனி..,
என்றைக்கும் அவளை
ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை…
என்றாவது என் முன்னே
அவள் எதிர்ப்பட்டுவிட்டு விட்டால்..,
பாடுபட்ட காதலின் உணர்வுகள்
வீனாகிப் போய்விடும்…
அவள் கொலுசொலி கேட்கும்போதே கண்களை இறுக மூடிக்கொண்டால்…
விளையவிருக்கும் முட்செடியை முளையும்போதே தடுத்திடலாம்…
சிந்தனை என்று வந்துவிட்டால் சாணக்கியனுக்கும் சளைத்தவன் நானல்ல…
பஞ்சத்தில் அடிபட்ட பாம்பு.,
வஞ்சம்வைத்து நஞ்சை உமிழ்வதுபோல்…
என் நெஞ்சத்தில் அன்று குடிகொண்டவளை
நான் அன்றே வஞ்சிக்க நேரிடும்…
‘ கோபங்கள் தொடரும்… ‘