இப்படியும் சில மனிதர்கள்

காட்டு மிருகங்கள் கூட
கட்டுபாடுகள் சில வகுத்து
கட்டுக்கோப்பாய் வாழ கற்றுக்கொண்டது…

ஆனால்.,

நம் நாட்டில்..
நாணயம் மறந்து.,
மனிதனின் குணங்களை மறந்த
ஒருசில மனித பிறவிகள்…

தன் குறை இதுவென்று அறியாமல்..,
பிறர் குறையை நிறைவாய் சொல்லி
புகழ் தேடும் சில ஆண்கள்…

உண்டு கொளுத்த தேகத்தின் சூடு தணிய
காதலெனும் பெயரில் கலவி தேடும்
சில பெண்கள்…

கட்டிய தாலிக்காய்..,
கட்டிய மனைவியிடம்
காட்டு மிருகங்களை விட கேவலமாய்
வேட்டையாடும் சில ஆண்கள்…

ஒருவேளை உணவிற்க்காய்
உடலைவிற்க தயாராய் சில பெண்கள்…

உணர்வுகளை கொன்று.,
உறவு தேடும் சில பெண்கள்…

ஒருவனுக்கு ஒருத்தி என்ற புகழுக்குள்
நம் தமிழகம் ஒளிந்து கொள்ள…

உயிர்க்கொள்ளும் நோய்க்கு
சிவப்புக் கம்பளம் விரித்து
விருந்துகொடுக்கும் திரைப்பட அதிபர்கள்…

சிந்திக்க தெரிந்தவன்தான்
மனிதன் என்றால்…

சிதைக்குள் முடிந்து போகும் மனித சதைக்கு
அலையும் மனிதர்களை
மிருகங்கள் என்று கூறலாமா…?

காட்டு மிருகங்கள்கூட
நம் தமிழினத்தைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பது.,
உன் செவிக்கு கேட்கவில்லையா…?

காட்டில் கண்ணியம் காக்கும்
விலங்குகள் மத்தியில்..,

நாட்டில் இப்படியும்
ஒருசில மனித ஜென்மங்கள்…


” தொடரும் இந்த கிறுக்கல்கள் ”

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (30-Dec-16, 12:08 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 102

மேலே