விளிம்பில் நான்

இங்கே இதனை
விட்டு விட
வேண்டுமெனவும்,
இல்லையெனில்
அங்கே இதனை
காட்டி கொள்ள
கூடாதெனவும்,
சாலையின் நடுவே
பயணிக்கும்
அந்த வெள்ளை
கோடினை போலவே
எனக்கான பாதை வகுத்து
நானும் பயணிக்கிறேன்!

வழி நெடுவே
தனி ஒருவனாய்
எனக்கான முகமுடியை
நெய்து கொண்டிருந்தேன்
இச்சமுகத்தில் என்னை
அடையாளம் காட்ட..,

என் முகத்தில்
ஏமாற்றத்தின் பிசுருகளும்,
துவண்டு போன
சுருக்கங்களும்,
போராட்டத்தின்
தழும்புகளும்,
காண கிடக்க
அதற்கான முகச் சாயம்
எங்கும் விற்கபடவிலை!

கூட்ட நெரிசலில்
விழுந்து போன
எனது ஆசைகள்
என் மிதியடி பட்டே
கிடக்கிறது...,

மீட்டெடுக்க ஒரு கோப்பை
விஷம் ஊற்றி கொடுங்கள்
நஞ்சு நிறைந்த இவ்வுடலில்
நஞ்சு முறிந்து போகட்டும்!

எழுதியவர் : ரமேஷ் (7-Jul-11, 4:51 pm)
சேர்த்தது : rameshrackson
பார்வை : 409

மேலே