கங்கனா

என்னடா மாரி உம் பொண்ணுக்கு கங்கணா-ன்னு பேரு வச்சிருக்கற. அவ என்ன கங்கணம் (bracelet or bangle) கட்டிட்டு உனக்கு தொல்ல குடுக்கப் போறாளா? இல்ல கட்டிக்கப் போறவனக்கு காலம் பூரா தொல்ல குடுக்கப் போறாளா?
@@@@@
இல்லம்மா எம் பொண்ணு மகம் நட்சத்திரல பொறந்தவ. பத்தரமாத்து தங்கமா வளந்து நாட்டையே ஆளப்போறாமா?
@@@@@
ஆமாண்டா நாட்டை ஆண்டு ஆம்பளைங்கள எல்லாம் குனிஞ்சு குனிஞ்சு கும்பட வைக்கப்போறாளா?
@@@@
அது மகம் நட்சத்திரோட வேலமா. அதிகச் சம்பளம் வாங்கற இந்தி நடிகை பேரு கங்கனா (Kangana). அந்த நடிகை பேரத்தான் பாப்பாவுக்கு வச்சேன்.
@@@@@
அர்த்தங்கூடத் தெரியாத ஒரு இந்தி நடிகை பேர உம் மவளுக்கு வச்சிருக்கற. உம் பொண்ணையும் நடிகையாக்கப் போறயாடா மாரி?
இப்ப அந்த டிவி பொட்டி நிகழ்ச்சில தங்களோட பொண் கொழந்தைங்கள சினிமாவ்ல வர்ற காதல் பாட்டுங்களப் பாட வச்சும் ஆடவச்சும் ஆனந்த கண்ணீர் வடிக்கறாங்க சில தாய்மார்களும் தந்தைதைமார்களும் அது மாதிரி நீயும இளவேனிலும் ஆன ந்தப்படறதுக்கு நீயும் உங் கங்கணத்தை அனுப்பி வைக்கப்போறயா?
@@@@@
என்னம்மா நீங்க உங்க காலத்திலேயே இருக்கறீங்க. இப்ப இதெல்லாம் சகஜம் அம்மா. காலம் மாறிப் போச்சு.
@@@@@
ஆமாண்டா கலிகாலந்தானே நடக்குது. எல்லாஞ் சரியாத்தான் இருக்கும்.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ,ஃஃஃஃஃ
நம் மொழி செம்மொழி
சீரிளமை குன்றா
உலகின் முதன் மொழி!

எழுதியவர் : மலர் (2-Jan-17, 6:36 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 286

மேலே