பகலில் காண முடியாததை

பிரெஞ்ச் நாவலாசிரியர் பால்ஸாக் வசித்த அறைக்குள் ஒருநாள் இரவு நேரத்தில் திருடன் நுழைந்து மேஜையைத் துழாவிக் கொண்டிருந்தான்.

தூக்கம் வராமல் புரண்டு படுத்த அவர் இதைக் கண்டு பலமாகச் சிரித்தார்.

"எதற்கு சிரிக்கிறாய்?" என்றான் திருடன்.

"நான் பகலில் காண முடியாத பணத்தை நீ இரவில் கண்டு விடாலாமென்று நினைத்து இவ்வளவு சிரமப்படுகிறாயே... அதை நினைத்துத்தான் சிரித்தேன்" என்றார்.

- கணேஷ் அரவிந்த்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (2-Jan-17, 10:42 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 417

மேலே