பேருந்தில் ஓர் பெண்-அழகு தேவதை

நேரங்கள் உருண்டோட
ஆகாயமோ இருண்டிருக்க
குழந்தைகளின் சிரிப்பு
காதினைப் பிளக்க
பேருந்தினில் நான் அமர்ந்திருக்க
உறக்கம் என்னை வாவா என்றழைக்க
இமைக்க முடியாக் கூட்டத்திலே
இமைமுடிகள் பனிக்காற்றில் பறக்க
சிறகடித்தாள் வெள்ளைப்புறாவாக
கண்டேன்
ஓடாமல் நிற்கும் நேரத்தினை
வெளிச்சமான மேகத்தினைக்
நிலவின் பொலிவினைக்
உன் கன்னத்திலே
பின்னிப்பிணைந்த கருங் கூந்தலினை
காத்திருந்த கண்களுக்கு
விருந்தாய் அமைந்த பெண்ணே
எங்கே போனாய்?
இத்தனை நாளாய்
என்கண்ணில் படாமலே
கீழே விழாமல்
தாங்கிப் பிடிப்பேன்
உன் கைகளை விடாமலே..

எழுதியவர் : சரத் குமார் (2-Jan-17, 9:57 pm)
சேர்த்தது : சரத் குமார்
பார்வை : 228

மேலே