டிஜிட்டல் உலகம்
கிராமத்தில் அண்ணனும் தம்பியும் பேசிக் கொள்கிறார்கள்...
தம்பி:- அண்ணே! ஆ ஊ னா டிஜிட்டல் உலகமென்கிறார்களே..
அப்படினா என்ன அண்ணே?...
அண்ணன்:- தம்பி உனக்கு புரியுற மாதிரி சொல்லுறேன், கேட்டுக்கோ.
நம்ம ஊரில் இந்த பொம்பளைங்க எல்லாம் வீட்டு வாசல் இருந்துகிட்டு ஊர் புறணி பேசுவார்களே, அது மாதிரி...
தம்பி:- இன்னும் புரியுறமாதிரி சொல்லுங்கண்ணே..
அண்ணன்:- இந்த ஆம்பளைங்க டீக்கடையில் பேப்பர் படித்துவிட்டு அரசியல் பேசுவார்கள் அல்லவா?
அது மாதிரி, இணையத்தில் பேஷ்புக், டிவிட்டர், வாட்சாப் போன்றவற்றில் உலகப் புறணி பேசுவது தான்டா டிஜிட்டல் உலகத்தோட விளக்கம். இப்போ புரிஞ்சுட்டுத்தா?
தம்பி:- நல்லா புரியுது அண்ணே. உங்களுக்கு அதில நிறைய பழக்கம் போல...
அண்ணன்:- ( இதெல்லாம் எங்க கத்துகிறான்?. நம்மளயே கலாய்க்கிறானே. ) ???