தவிப்பு
வெள்ளை நிற ஆடையில் இன்று
கொள்ளை அழகுடன் வந்திருந்தாள். - அவளுக்கு
தொல்லையாக நான் இல்லாமல் இருந்தால்
பிள்ளைப்போல கவிதைகளால் கொஞ்சியிருப்பேன்
முல்லைப் போன்றவளான அவள் அழகை.
கல்லைப்போல அவள் கடக்கும் போது இருந்தவன்
கடந்தபின் தவிர்த்துவிட்டு வந்தேன் தவிப்புகளுடன்.