உன் பார்வையில் என் ஜீவன் வாழுமடி 555
சகியே...
முதல்முறை உன்னை
நான் கண்டேன்...
அந்த பேருந்து
நிலையத்தில்...
ஏனோ உன்னை என் பார்வையாலே
விழுங்குவதைப்போல பார்த்தேன்...
நீயும் எதார்த்தமாக
என்னை பார்த்தாய்...
நான் பார்வையை
திருப்பினேன்...
மீண்டும் உன்னை
கண்டேன்...
அதே பேருந்து நிலையத்தில்
சில நாட்கள் கடந்தபின்...
உன் பார்வைகள்
என்னை தேடின...
தேடிய உன் பார்வைக்கு
என் பார்வையை கொடுத்தேன்...
சில நிமிடங்கள் உன் பார்வையை
விட்டு மறைந்தேன்...
அந்த நிமிடம் நீ என்னை
தலைசாய்த்து பார்த்தாயடி...
முட்கள் தைத்தது இதயத்தில்
அந்த நிமிடம்...
நானும் தொலைத்தேன் என்
இதயத்தை உன்னிடம்...
மீண்டும் ஒருமுறை என்னை
தலைசாய்த்து பாரடி கண்ணே...
முள்ளை முள்ளால்தானே
எடுக்க வேண்டும்...
உன்னால் என் ஜீவன்
வாழட்டும்...
ஒருமுறை பாரடி கண்ணே
தலைசாய்த்து என்னை.....