குரங்காட்டி குணபாலா

யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே, சுமார் 90 மைல் தூரத்தில் வன்னிமாவட்டத்தில் அமைந்த நகரம் வவுனியா. ஒரு காலத்தில குரங்குகள், யானைகள், சிறுத்தைகள், நரிகள்; அதிகம் வாழ்ந்த அடர்த்தியான காடு நிறைந்த பகுதியாக இருந்தது வவுனியா. அவ்வூர், காலப்போக்கில் விரைவாக வளரச்சி அடைந்தது. இந்நகரம் வடமாகாணத்தையும், வட மத்திய மாகாணத்தையும் பிரிக்கும் எல்லையில் அமைந்துள்ள படியால் தமிழ், சிங்கள, முஸ்லீம் இன இன மக்கள் கலநது வாழும் நகரமாகும்

இந்த நகரத்தில் இருந்து மன்னார் நோக்கிப் போகும் பிரதான பாதையில் 3 மைல் தூரத்தில் அமைந்த கிராமம் பண்டாரகுளம். குணபாலாவின் தந்தை விஜயபாலா இரண்டு ஏக்கர் வயற்காணிக்கு சொந்தக்காரனான விவசாயி. காலப்போக்கில் குடியினால் விஜயபாலா சொத்தை இழந்து தனது ஒரே மகன் குணபாலாவையும், மனைவி சீலாவதியையும் நிராகதியாகவிட்டு போனவன்;. தந்தையை சிறுவயதிலேயே இழந்த குணபாலாவை வளர்க்கும் பொறுப்;பு அவனது தாய் சீலாவதி மேல் விழுந்தது. கூலி வேலை செயது மகனை வளர்த்தாள்;.

இனிமையாக பாடக்கூடிய குரல் வளம் உள்ள குணபாலா ரபானை என்ற பறை போன்ற வாத்தியத்தை வாசித்து, பழைய சிங்கள, தமிழ கிராமீயப் பாடல்கள் பாடி, கிராம வாசிகளை மகிழ்வித்து பிழைத்து வந்தான். கிராமத்து சிறுவர்களுக்கு அவனைக் கண்டாலே ஒரே மகிழ்ச்சி. காரணம் கிராமத்து மரபுக் கதைகள் அடங்கிய கவிதைகளை தாளத்துதோடு அவன் பாடுவதேயாகும். அதுவுமல்லாமல் மூங்கிலால் செய்த நாலடி உயரமான பொய்கால்கள் வைத்து கிராமத்தில் அவன் நடந்தபடியே, ரபானை தாளத்துக்கு ஏற்றவாறு இனிமையான குரலில் கிராமிய பாடல்களை பாடியபடி நடந்து செல்வதைப் பார்த்து வுவனியாவையும,; சுற்றுப்பர கிராமங்கiளைச் சேர்ந்த ஊர்மக்களும், சிறுவர்களும் அதிசயத்தோடு வாயை பிளந்தவாறே கேட்டு கொண்டிருப்பார்கள்.

அவன் கூடவே கோமாளி வேஷம் போட்ட குரங்குக் குட்டி ஒன்றும்; துணையாக நடந்து செல்லும். இக்குரங்குக் குட்டிக்கு ஹனுமான் என்ற பெயர் வைத்திருந்தான் குணபாலா.

குணபாலாவின் கட்டளைக்கு ஏற்றவாறு ஹனுமான் குத்துக்கர்ணம் அடித்;து ஒரு தடியைச் சுமந்தவாறு காவடி ஆட்டம் ஆடும். தனது சர்க்கஸ் வித்தைகள் மூலம் சிறுவர்களை மகிழவிக்கும். தனது கெட்டித்தனத்தைக் காட்டியபின் குழுமி நிற்பவர்களிடம் போய் கைகளை நீட்டும். அவர்கள் கொடுக்கும் பணத்தை கொண்டு வந்து குணபாலாவிடம் கொடுக்கும். அதன் சேவைக்காக வாழைப்பழம் ஒன்றை குணபாலா ஹனுமானுக்கு கொடுப்பான்

ஹனுமானுக்கு மூன்று மாதமாக இருக்கும் போது தாயின் மடியைப் பிடித்தபடியே மரத்துக்கு மரம் தாயுடன் தாவித்திரியும். ஒருநாள் தாயின் வயிற்றில் தன்பிடியைத் தவற விட்டதால், தவறி கீழே வழுந்தது. தாய் குட்டியை திரும்பவும் ஏற்றுக்கொள்ள வில்லை தனிமையாகி என்ன செய்வது என்று தெரியாது நின்ற குரங்குக் குட்டியை, தற்செயலாக குணபாலா கண்டான். அக்குட்டி மேல் பரிதாபப்பட்டு வீட்டுக்கு கூட்டிச்சென்று வளர்க்கத் தொடங்கினான். பல சர்க்கஸ் வித்தைகளை கற்றுக்கொடுத்தான். அவ்வித்தைகள் மூலம் அக் குரங்குக் குட்டி அவனது வருமானம் அதிகரிக்க உதவியது.

வீட்டில் குணபாலாவோடு சேர்ந்தே ஹனுமானும் சாப்பிடுவான். குணபாலா தூங்கும் போது அவனுக்கு அருகே ஹனுமான் தூங்குவான்.

ஒரு நாள் குணபாலாவின் குரங்குக் குட்டி குத்துகர்ணம் அடித்து பல வித சரக்கஸ் வித்தைகள் செய்வதை கைதட்டி பார்த்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். அக்கூட்டத்தில் ஒரு அரசாங்க அதிகாரியும் அவரது உதவியாளனும உண்ணிப்பாக குரங்கு குணபாலாவின் கட்டளைபடி சடப்பதை பார்த்துக கொண்டுநின்றனர். கூட்டம் கலைந்த பின் குணபாலாவிடம் வந்து ஹனுமானைபற்றி பல கேள்விகள் கேட்டார் அதிகாரி.

“ நீ தான் குணபாலா என்பவனா”?

“உன் தொழில் இந்த குரங்கை பாவித்து சர்க்கஸ விததைகள் காட்டி பழைப்பதா”?

“ ஓம் சேர். ரபானை அடித்து பாட்டும் பாடுவேன்”..

“இது உன் குரங்;குக் குட்டியா “?

“ ஓம் சேர்”

“இந்தக் குரங்குக் குட்டியை நீ சித்தரவதை செய்வதாக எங்களுக்கு முறைப்பாடுகள் வந்துள்ளது. நான் மிருக வதை முறைப்பாடுகளை கவனிக்கும் அதிகாரி. இலங்கைச் சட்டத்தினபடி ஒரு மிருகத்துக்கு தேவையற்ற வலி அல்லது துன்பத்தை ஏற்படுத்தும் விதமாக , அடித்து, தவறாக வேலை செய்யவைத்து, துஷ்பிரயோகம், சித்திரவதை செய்வது ஒரு குற்றமாகும். இந்த குரங்கு குட்டியை நீ பயமுறுத்தி வித்தைகள் செய்ய வைக்கிறாய். இதற்கு சட்டப்படி தண்டனையானது அபராதம் அல்லது சிறை அல்லது இரண்டும் அடங்கும்;. அதனால் உன்மேல மிருகவதைக்காக நடவடிக்கை எடுக்கப் போகிறேன்” என்றார் அதிகாரி.

“சேர் யார் சொன்னது நான் இந்தக் குட்டியை வதைக்கிறேன் என்று தாயின் மடியில் இருந்து தவறி விழுந்து தனிமையாக கவனிப்பார் அற்று இருந்தபோது கண்டெடுத்தேன். அதற்கு ஹனுமான் என்று பெயர் வைத்து பல வித்தைகளை கற்றுக் கொடுத்திருக்கிறேன். இக்குட்டி என் சகோதரனைப் போல் பழகுகிறது. என்னோடு சேர்ந்து என் பிழைப்புக்கு உதவுகிறது. நான் இந்த குரங்குக் குட்டியை சித்திரவதை செய்வதாக என் மேல் எரிச்சல்பட்டு, என விரோதிகள் சிலர் முறையிட்டிருக்கலாம். அதை நீங்கள் நம்பவேண்டாம்”

“ அது சரி இந்த குரங்குக் குட்டியை நீ கண்டெடுத்து வளர்த்து, உன் பிழைப்புக்கு பாவிப்பதை பற்ற்p நீ எங்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை.”?

“எனக்கு உங்களுக்கு அறிவிக்கவேண்டும் என்று தெரியாது சேர். ஹனுமானை நான் வளர்க்க ஏதாவது வரி கட்டவேணுமா சேர்”?

“வரி கட்ட தேவையில்லை. நாங்கள் உன் குரஙகுக் குட்டியின் பாதுகாப்பு கருதி மிருகங்களை பாதுகாக்கும் நிலையத்துக்கு அழைத்துப்போகப் போகிறோம்”.

“ என்ன சேர் சொல்லுகிறீர்கள்? எனக்கும,; ஹனுமானுக்கும் இடையிலான உறவை இல்;லாமல் செய்யப் பாக்குறீர்களா? என் பிழைப்புக்கு பாதகம் செய்கிறீர்களே.”

“எங்களுக்கு உனது விளக்கம் தேவையில்லை. என்றாவது ஒருநாள் இந்த குரங்குக் குட்டி யாரையாவது கடித்தால் அதனால் கடிவாங்கினவருக்கு நோய் வரலாம். வெறி நாய் கடித்து பைத்தியம் பிடித்தவர்கள் பற்றி கேள்விப் பட்;டிருப்பியே”.

“ஹனுமானுக்கு அந்த நிலை ஏற்படாத வாறு நான் கவனித்து வருகிறேன் சேர்”.

“ உனது விளக்கத்தை என்னால் ஏற்றுக் கொள் முடியாது. இந்டத குரங்கு குட்டி இல்லாமல் உன் வருமானம் குறைந்து விடும் என்றால் நான் மேல் அதிகாhரிகளுக்கு எழுதி பணம் வாங்கித் தருகிறேன்”.

“எனக்கு பணம் வேண்டாம் சேர். ஹனுமானை என்னனிடம் இருநது பிரிக்காதீர்கள். அதுவே போதும்”இ குணபாலா கெஞ்சினான்.

குணபாலா எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தும் அதிகாரி கேட்கவில்லை. அவரோடு கூடவே வந்த பியொன், கொண்டு வந்த கூட்டுக்குள் ஹனுமானை வலுக் கட்டாயமாக அடைத்தான். ஹனுமான் கூட்டுக்குள் எறுவதற்கு மறுத்து ஓலம் இட்டு கதறியது. குணபாலா எவ்வளவோ தடுத்தும் வந்தவர்கள் தங்கள் கடமையைச் செய்தனர்.

“சேர் நான் இனி எண்டை ஹனுமானை பார்க்க முடியாதா’? குணபாலா அதிகாரியைக் கேட்டான்.

“ஏன் முடியாது மாதம் ஒரு முறை வந்து மிருக பாதுகாப்பு நிலையத்தில் வந்து உன் ஹனுமானைப் பார்”இ அதிகாரி சொன்னார்.

வந்தவர்கள் ஹனுமானோடு போனபின் குணபாலாவுக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. பாடுவதை நிறுத்திவிட்டான். ரபானையை அவன் தெர்டவே இல்லை. தனது இரு பொய்கால்களை களட்டி எறிந்தான். ஊர் மக்களும,; சிறுவர்களும் குரங்காட்டி குணபாலாவினதும,;; ஹனுமானதும் வருகையை எதிர்பார்த்து ஏமாந்தனர்.

********

அன்று காலை, ஹனுமானை பார்க்கப் போவதற்கு தன் மகன் தயாராவதை சிலாவதி கண்டாள்.
“ என்ன குணா, ஹனுமானை பார்க்கப் போகிறாயா”?
“ ஓம் அம்மே. ஹனுமானை பிரிந்து பல நாட்களாகிவிட்டது. அவன் இல்லாமல் வீடே வெரிச் செண்டாகிவிட்டது. அவனை எனக்குப் பார்க்க வேண்டும் போலிருக்கு”.

“நான் வடை செய்திருக்கிறன்;. நீ போகும் போது ஹனுமானுக்கு எடுத்துப்போக மறக்காதே”, சீலாவதி சொன்னாள்.

“அம்மே நான் ஹனுமானுக்குப் பிரியமான வாழைப்பழம் வாங்கிக் கொண்டு; போகிறேன். இதை எல்லாம் ஹனுமானுக்கு குடுக்க விடுவார்களோ தெரியாது:” என்றான் குணபாலா.

வவுனியா நகரத்தில் இருந்த மிருக பாதுகாப்பு நிலையத்துக்கு குணபாலா போன போது நாய்களின் ஓலக் குரல்கள் ஒலித்தன. குணபாலாவின் கண்கள் ஹனுமானை தேடிற்று.

அந்த மிருக பாதுகாப்பு நிலையத்தை பராமரிக்கும் காவலாளியை; பார்த்து,

“ ஐயா என்; ஹனுமான் எங்கே”?

“ ஹனுமானா? என்ன சொல்லுகிறாய்” அந்த காவலாளி கேட்டான்

“ ஐயா ஒரு மாதத்துக்கு முன்பு, நான் வளர்த்த குரங்குக் குட்டியை என்னிடம் இருந்து பிரித்து, கூட்டில் அடைத்து, பாதுகாப்பு என்று சொல்லி இங்கு கூட்டி வந்தீர்கள். அந்த குரங்குக் குட்டியைத் தான் கேட்கிறேன்”.

“ ஓ அந்த குரங்கு குட்டியையா கேட்கிறாய்? அதை இங்கு கொண்டு வந்த பிறகு, இருகிழமையாக சாப்பிட மறுத்து சத்தம் போட்டு குளப்படி செய்தது. தீடிரென்று ஒரு நாள் அது இறந்து விட்டது” என்றான் காவலாளி.

“ என்ன ஐயா சொல்லுறீங்கள்? என் ஹனுமானை கொன்று விட்டீர்களா?. கொலைகாரப் பாவிகள் நீங்கள்” என்று கதறி அழுதான் குணபாலா..

********
(யாவும் கற்பனையே)

எழுதியவர் : (பொன் குலேந்திரன் - கனடா) (5-Jan-17, 8:14 am)
பார்வை : 432

மேலே