முயல்

முயல்- பாடல்
நொடிக்கும் கண்ணிமைப் பொழுதினிலே
சிட்டாய் சீறிப் பாய்ந்திடுவேன்
பாங்காய்ப் பளபளவென்றிருப்பதனால்
பலரும் விரும்பி மகிழ்ந்திடுவர்
பொங்கும் பொலிவுடன் நான்தானே
இங்கும் அங்கும் ஓடிடுவேன்
சிறியோர் பெரியோர் அனைவருக்கும்
சிறப்பாய் மகிழ்வைத் தந்திடுவேன்.