மகாகவி பாரதி

மகாகவி
கவிதை படைத்த கடவுள் நீ
கடவுள் படைத்த கவிதை நீ
விடுதலை கேட்ட வேள்வி தீ
ஞாலம் கண்ட ஞான தீ

தன் பசி அறியா தாயினும் மேலாய்
புல்லின் பசி நீக்கி புவியிலுயர்ந்தாய்...
வாணியிடமே திடம் மிகுந்தாய் தமிழ் வாணில் நீயும் நெடிதுயர்ந்தாய்...

நீட்டோலை வாசித்தாய் நீ
புதுக்கவிதைக்கு
இன்று தமிழ் சோலை
கவிதைப்பூக்களின் கடலானது...

காணி நிலம் வேண்டி நின்றாயோ
தமிழ் காணியின் தலைமைப் புலவா
நாணி மிக நிற்கின்றோம்
நம் பிழை பொறுத்திடு
நா நிலத்தின் நாயகனே...

நாமினி வாழும் வரை போற்றிடுவோம்
நம்தாயின் தவப்புதல்வனை.

நிலாரவி.

எழுதியவர் : நிலாரவி (6-Jan-17, 7:09 pm)
Tanglish : makakavi
பார்வை : 229

மேலே